Thursday, November 20, 2008

784பழைய சாதமும் பஞ்சாமிர்தம்தான்



பதிவின் தலைப்பைப் பார்த்து தயவுசெய்து கொதிப்படையவேண்டாம் இசையன்பர்களே. யாருக்காவது புதிய, பழைய பாடல் வேண்டுமா? தேடிப்போங்க தேன்கிண்ணம் தளத்திற்க்கு என்று சொல்லும் அளவுக்கு இதில் புதிய பழைய பாடல்கள் தொகுப்பு வரவேண்டும் என்பது என் ஆசை. அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று எனக்கு தெரியவில்லை. இவரை எங்கேப்பா புடிச்சீங்கன்னு சில பேர் கேட்பது எனக்கு கேக்குதுங்க. என்னங்க பன்றது அதிகம் கேட்கமுடியாத அறிதான சில பழைய பாடல்களை வானொலியில் கேட்கும் போது நமது இணையதள இசைப்பிரியர்களூக்கு வழங்காமல் இருந்தால் எவ்வளவு துரோகம். அதனால் தான் இந்த பதிவு (ஹி.. ஹி... ஹி..). சரி விஷயத்துக்கு வருகிறேன்.புதிய பாடலகள் அரங்கேறும் வரிசையில் இந்த தலைப்பைப்போல் சில அறிதான பிரபலமான, பிரபலமாகாத பாடல்கள் கேட்கவும் தேவாமிர்தமாக தான் இருக்கிறது. இதோ கீழே பாடல்கள் தொகுப்புடன் கேட்டுத்தான் பாருங்களேன்.

1. என்றும் சொந்தமில்லை, புனர்ஜென்மம், பி.பி.ஸ்ரீனிவாஸ்
2. மயக்கம் எனது, குங்குமம், டி.எம்.எஸ்
3. போடா போடா, உல்லாசபயணம், டி.எம்.எஸ்
4. மலை சாய்ந்து போனால், காற்றிலே கீதம், டி.எம்.எஸ்
5. என்ன உறவோ என்ன பிரிவோ, கலங்கரை விளக்கம், டி.எம்.எஸ்
6. கனவுகளே கனவுகளே, உத்தமன், டி,எம்.எஸ்
7. தங்கமலரே உள்ளமே,
8. என்னை மறந்ததேன், க்லங்கரை விளக்கம்
9. ஒருவனுக்கு ஒருத்தி என்றேன், தேனும் பாலும்
10. பகலிலே சந்திரனை, குலமகள் ராதை
11. கண்ணிலே அன்பிருந்தால், ஆனந்தி
12. பூமாலை இங்கே, பராசக்தி
13. அன்பில் மலர்ந்த ரோஜா, கணவனே கண்கண்ட தெய்வம்,பி.சுசீலா

Get this widget | Track details | eSnips Social DNA


பாடல் தொகுப்பின் நடுவில் நமது டிஜ்ஜிடல் குரலோன் திரு. ஆர்.ஜி.எல்,என் சார் ஒரு வரி சொல்லுவார் ”தினமும் சாம்பார், ரசம், பொரியல் என்பதை விட ஒரு நாள் பழைய சாதமும், வெங்காயத்தையும் சாப்பிட்டு பாருங்கள் பழைய சாதமும் பஞ்சாமிர்தமாக தெரியும் சோகமும் ஒரு சுகமே”.

”சோகத்திலும் ஒரு சுகம் இருக்கிறது” இந்த வார்த்தையை எனது பா.நி.பா தளத்தில் பாலுஜியின் சோகப்பாடல்கள் விளக்கத்தில் இந்த வார்த்தையை பலதடவை நான் உபயோகித்துருக்கிறேன். திரு. ஆர்.ஜி.எல்.என் சார் சொன்னது போல் சோகத்திலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது இது முற்றிலும் உண்மை.

மேலும் “பகலிலே சந்திரனை” என்ற பாடலுக்கு ஒன்று சொல்வார் சில பழைய பாடல்களானாலும் புதிய பாடல்களானாலும் கேட்டால் ரசிக்க முடியாது திரையில் காட்சியுடன் பாடல்களை கேட்டு ரசிக்கும் போது அற்புதமாக இருக்கும் இந்த வார்த்தையும் சரிதான்.

அறிதான அதிகம் கேட்கமுடியாத பாடல்களை வழங்கிய “டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களூக்கு தேன்கிண்ணம் நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

9 Comments:

நானானி said...

// என்றும் சொந்தமில்லை, புனர்ஜென்மம், பி.பி.ஸ்ரீனிவாஸ்//
தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள் கயல்! அது டி.எம். சௌந்தரராஜன்.

நானானி said...

//ஒரு நாள் பழைய சாதமும், வெங்காயத்தையும் சாப்பிட்டு பாருங்கள் பழைய சாதமும் பஞ்சாமிர்தமாக தெரியும்//
சத்தியமான உண்மை!!கயல்விழி முத்துலெட்சுமி!
நானும் ஒரு பழைய பாடல் விரும்பி.
எனக்குத்தெரிந்த பாடல்களையும் பகிர்ந்து கொள்ளலாமா?

Anonymous said...

நானானி அவரகளே, என்றும் சொந்தமில்லை, டி.எம்.எஸ் அண்ணாவா? பி.பி.சீனிவாஸ் சார் மாதிரி உள்ளதே அதுவும் அறிவிப்பாளரே சொல்றாரே (ரேடீயோ அறிவிப்பாளர்கள் தவறு செய்யமாட்டார்களே?) நீங்கள் ஒலிக்கோப்பு கேட்கவில்லையா? நான் ரிக்கார்டி தகவல் பார்த்து திருத்திவிடுகிறேன். நீங்களூம் மறுமுறை சரிபாருங்கள். வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி. தேன்கிண்ணாம் என்றாலே அதிகம் பழைய பாடல்களைத்தான் குறிக்கும் ஆகையால் தாராளமாக பதியுங்கள் (கவனம் அதிகம் பிரபல மாகாத பாடல்கள் அதுவும் இனிமையாக உள்ள பாடல்களாக இருந்தால் நமது நேயர்கள் மகிழ்ச்சியடைவார்கள்) அந்த நோக்கத்தில் தான் நான் இந்த பதிவை பதிந்தேன். இந்த தளத்தின் உரிமையாளர் என் கருத்தை ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன். கருத்து தான் என்னுடையது நடைமுறைப்படுத்த அனுமதிப்பது உரிமையாளர் சம்மதம் வேண்டும். நன்றி, கோவை ரவி

நானானி said...

பதிவு கயல்விழி முத்துலெட்சுமியுடையது என்றே எண்ணி பின்னூட்டமிட்டு விட்டேன். தவறுக்கு வருந்துகிறேன், கோவை ரவி!
கட்டாயம் பழைய பிரபலமாகாத பாடல்களைப் பதிகிறேன். நன்றி!

Anonymous said...

//பதிவு கயல்விழி முத்துலெட்சுமியுடையது என்றே எண்ணி பின்னூட்டமிட்டு விட்டேன். தவறுக்கு வருந்துகிறேன், //

யார் பதிந்தாலென்ன ? நானானி அவர்களே, தவறுகள் யார் வேண்டுமென்றாலும் சுட்டி காட்டலாம் தவறில்லை. என் வானொலி நண்பர்கள் அடுத்த பதிவு கேளூங்கள் வித்தியாசமாக இருக்கும் கூடிய விரைவில்.

Anonymous said...

Ravi Sir, Vanakkam. Endrum Sondamillai padalai Moondru sigarangal padi irukkirargal.
Endrum Thunbamillai-TMS-Magizhchi
Engum sondamillai - PBS- Sogam
Endrum Thunbamillai-P Suseela-Sogam

Anonymous said...

வாஙக ஜெகதீஸ் சார்,

//Endrum Sondamillai padalai Moondru sigarangal padi irukkirargal.
Endrum Thunbamillai-TMS-Magizhchi
Engum sondamillai - PBS- Sogam
Endrum Thunbamillai-P Suseela-Sogam//

அருமையான தகவல் நானே இந்த பாடலை முதல் முறை கேட்டேன் சென்னை நண்பர் சொன்னதும் தான் எனக்கு சந்தேகம். நீங்களே பதிவில் வந்து நல்ல் தகவலை தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. அடிக்கடி வாங்க உங்களை போன்ற பழைய பாடல்கள் விரும்பிகள் இங்கே ஏகப்பட்ட்பேர் உள்ளனர். நம் வானொலி நண்பர்களின் வித்தியாசமான ஆக்கங்கள் இங்கே பதியப்படும்.

Anonymous said...

நானானி மேடம்,

நீங்கள் குறிப்ப்ட்டது சரிதான் மூன்று சிகரங்கள் தனித்தனியாக பாடியுள்ளார்கள். இப்போது எனக்கு சந்தேகம் தீர்ந்தது. எனது கோவை வானொலி நண்பர் எஸ்.எம்.எஸ் செய்தார் நான் நீங்களே பதிவில் பின்னூட்டம் கொடுங்கள் என்று சொன்னேன். இது போல் பிரபல்மாகாத பாடல்கள் அதிகம் உள்ளது அதையேல்லாம் நேரம் கிடைக்கும் போது பதியனும்.

Anonymous said...

நானானி மேடம். உங்கள் மின்னஞ்சல் எனக்கு கொடுங்கள் அந்த 3 பாடல்களூம் உங்களூக்கு அனுப்பி வைக்கிறேன்.

Last 25 songs posted in Thenkinnam