Wednesday, September 26, 2012

என்ன தவம் செஞ்சுப்புட்டோம்



என்ன தவம் செஞ்சுப்புட்டோம்
அண்ணன் தங்க ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா
வாழும் எடம் பொறந்த எடம் ஆகுமா

காணும் காட்சி தீப்புடிக்க கண்ணு ரெண்டும் நீரெரைக்க
மீலனானும் கர சேத்து போறேனே
சாமி மேல பாரம் போட்டு வாரேனே

ஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ 
கண்ணே கற்பகமே கண்ணுக்குள்ள சொர்பனமே
தூங்காம அண்ணங்கூட எப்போதும் கூட இரு
எப்போதும் கூட இரு எப்போதும் கூட இரு
ஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ
ஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ

என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாலே
புது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே
கருவீட்டில் பூத்துப்புட்டோம்
வீட்டையும் தான் மாத்திப்புட்டோம்

அவதாரம் போல நீயும் அவதரித்தாயே 
மருதாணி போல என்ன வளத்து விட்டாயே 
செவந்த எடம் பொறந்த எடம்
உதிர்ந்த எடம் புகுந்த எடம்

என்ன தவம் செஞ்சுப்புட்டோம்
அண்ணன் தங்க ஆகிப்புட்டோம்

என்ன தவம் செஞ்சுப்புட்டோம் அண்ணன் தங்க

படம் : திருப்பாச்சி (2005)
இசை : தினா
பாடியர்கள் : தினா, சுவர்ணலதா, ராம்கிரண்
வரிகள் : பேரரசு

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வுக்கு நன்றி...

சந்திர வம்சம் said...

மறைந்த ஸ்வர்ணலதாவை நினைவு படுத்திவிடீர்கள். கவிதை அருமை.

Last 25 songs posted in Thenkinnam