Monday, September 10, 2012

கும்கி - சொய் சொய்ங்




சொய் சொய்ங் சொய் சொய்ங்
கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக் கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்

நாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

படம் : கும்கி (2012) 
இசை : இமான் 
பாடியவர் : மகிழினி மணிமாறன் 
வரிகள் : யுகபாரதி

7 Comments:

தமிழ்ச்செல்வி ஜி.ஜே said...

ம் கொஞ்சம் பரவாயில்ல

IlayaDhasan said...

பாடலைக் கேட்டுக் கொண்டே வரிகளை படிப்பதில் ஒரு தனி இன்பம் தான், நன்றி முயற்சிக்கு.கவிஞர் பட்டயக் கெளப்பி இருக்காரு,அவரின் அதிக படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Anonymous said...

order tramadol online without prescription tramadol 50mg slow release - buy tramadol without rx

Anonymous said...

Migavum nanri..

Anonymous said...

சொய் சொய்"என்று நம் காதுகளில் ஒலிக்கும் காந்தக்குரல் இவருடையதுதான். https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/262631_382451781846649_794962238_n.jpg இவரின் புகைபடத்தை காண எண்ணி கூகுளில் சல்லடை போட்டு சலித்தாலும் ஒன்று கூட மாட்டது.அதற்க்கு அவர் பெயர் கூட காரணமாய் இருக்கலாம்.அவரின் பெயர் மகிழினி மணிமாறன்...."சம்மக்சல்லோ" பாடிய வெளிநாட்டுகரனின் பெயரையும்,புகைபடத்தையும் வலைத்தளத்தில் ஏற்றி கொண்டாடிய நமக்கு இந்த தமிழச்சியின் புகைப்படத்தையும் பதிவேற்ற மனம் இல்லையோ?..தமிழனே தமிழனை மதிக்காவிட்டால் யார்தான் மதிப்பாங்க...தயவுசெய்து இவரின் புகைப்படத்தை உங்களுக்கு அறிமுகமான வலைதளங்களில் பதிவேற்றி ஒரு தமிழச்சியை பெருமைபடுத்துங்கள். குறிப்பு:இந்த புகைப்படம் ஆனந்தவிகடன் வலைத்தளத்தில் இருந்த ஒரு வீடியோவில் இருந்து எடுக்க பட்டது,,(இருந்தது ஒரு வீடியோதான் நண்பர்களே..)

""தமிழனாய் வாழ்வது பெருமையடா... தாய் மண்ணை காப்பது கடமையடா..""

பாலகிருஷ்ணன் said...

அருமையான அபூர்வமான குரல் வளம். கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.

Unknown said...

She has a good voice:

Here she is:

http://www.vikatan.com/av/2013/01/mzeyzj/images/p24.jpg>

Last 25 songs posted in Thenkinnam