Friday, February 18, 2011

வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன்

வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன் கிட்டுமோ கையில் கிட்டுமோ
வானவில்லுக்கு ஆசைப்பட்டேன் எட்டுமோ அது எட்டுமோ
ஏழையின் மனமே ஏங்குது தினமே
நல்லது நடக்கும் நாளும் மலரட்டுமே

வானத்து தாரகையோ யாரவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ எண்ணத்தை காட்டிடவோ
பார்த்தப்படிசொல்லிடத்தான் வார்த்தைகள் வருமோ
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
கனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்
(வானத்து..)

சுட்டும் விழிச் சுடர் பார்த்து மனம் கெட்டதை சொல்லட்டுமா
கொட்டும் பனித் துளி கூட என்னை சுட்டதை சொல்லட்டுமா
கம்பனிடம் கடன் கேட்டு கொஞ்சம் கற்பனை வாங்கட்டுமா
காதல் கொண்ட முகம் பார்த்து நான் வர்ணனை செய்யட்டுமா
அவள் வாங்கி போனாள் என் தூக்கம்
முகம் கண்டாலும் தீராது என் ஏக்கம்
கண்டுப்பிடி யாரு கண்டுப்பிடி
பிரம்மனுக்கு ஒரு தந்தி அடி
அவள் பேச்சு மொழி அல்ல மகுடி
(வானத்து..)

மொட்டு விரித்ததை போலே அந்த பட்டுத் துளிர் மோகமோ
முத்துச் சிதறுதல் போலே சின்ன சின்ன சிரிப்பழகோ
தித்தித்திடும் தேன் சுவையை நான் சொல்வது எப்படியோ
பொங்கி வரும் மலர் வாசம் அதை அள்ளுவதெப்படியோ
ஸ்வரம் ஏழில் அடங்காத ராகம்
இது எல்லோர்க்கும் கிடைக்காத கீதம்
ராதை அவள் நானும் கண்ணன் இல்லை
ராணிக்கு நான் ஒரு மன்னன் இல்லை
அவளோடு பொருந்தாது என் அழகு
(வானத்து..)

படம்: பூந்தோட்டம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், இளையராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam