மகளிர் மட்டும் அடிமை பட்ட
இனமா இனமா
மகளிர் மட்டும் வருத்தப்பட்ட
குலமா குலமா
மகளிர் மட்டும் ஒதுக்கப்பட்ட
நிலமா நிலமா
மகளிர் மட்ட உணர்வை விட்ட
ஜடமா ஜடமா
பாரப்பா ரபப்பப்பா
பெண் பாடு பெரிதப்பா
மகளிர் மட்டும்
மகளிர் மட்டும்
(மகளிர்..)
வேலைக்கு போய் தீரும் சில பேர்க்கு
போராடும் பதில் கூறும் கடமை பல பேர்க்கு
நட்போடு சேர்கின்ற விஷயம் பெரும்பாடு
ஆனாலும் உழைக்காமல் ஏது சாப்பாடு
எவருக்கு இங்கே புரியும் பெண் இதயம்
அவதிப்பட்டால் தெரியும் ஊர் அறியும்
வரவும் செலவும் சரிவர
இரவும் பகலும் உழைப்பது
மகளிர் மட்டும்
மகளிர் மட்டும்
சாராயம் ஓயாமல் குடிக்கும் ஆளோடு
சம்சாரம் போதாமல் இருக்கும் நாளேது
நாள் தோரும் மார்வாடி கடைக்கு போகாது
நகையோடு பேதைப்பெண் இருக்க முடியாது
வருமைக்கோட்டில் உயரும் பெண் துயரம்
எடுத்துச்சொன்னால் இமயம் ஓர் இதயம்
புயலில் கடலா எதுவரை
கடலில் பெருக
மகளிர் மட்டும்
மகளிர் மட்டும்
கல்யாணம் பெண் பாடு பெரிய விவகாரம்
பெண் பார்க்கும் மாப்பிள்ளை நடத்தும் வியாபாரம்
ஏதேதோ எதிர்ப்பார்த்து கண்ணை பார்பாரு
ஏராளம் சீர் செய்த பிறகும் கேட்பாரு
அடங்கிப்போகும் இதயம் பெண் இதயம்
வெடிக்கக்கூடும் ஸ்டவ்வும் சில சமயம்
(மகளிர்..)
படம்: மகளிர் மட்டும்
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
Sunday, February 13, 2011
மகளிர் மட்டும் அடிமை பட்ட
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment