Thursday, February 10, 2011

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா



கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா
(கண்ணின்..)

சாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தால்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை
சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை
(கண்ணின்..)

பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவள் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா
பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏனையர்க்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்
எரிகின்ற நேரத்தில் ஒவ்வொன்றும் பொய் இல்லை
கனவுகளில் மிதந்ந்தப்படி
கலங்குது மயங்குது பருவக்கொடி
(கண்ணின்..)

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து

Last 25 songs posted in Thenkinnam