Wednesday, February 16, 2011

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா



பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்
தென்றல் எங்கள் பாதைகளில் பூவை தூவும்
குயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு
குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு
பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது
இசையென்னும் கடலின் ஆழம் எங்கே என்று தெரியாது
பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே
(பாட்டு ஒன்னு..)

ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
இதயம் தானே எங்களது வாசல் ஆகும்
பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பறவை போல வாழ்ந்தோம்
பசியெடுத்தால் பாட்டை உன்னு திசைகள் தேடி சேர்ந்தோம்
ஒரு தெய்வம் நேரில் வந்து உறவைசொல்லி துணையாச்சு
உலகங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராச்சு
வானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்
(பாட்டு ஒன்னு..)

படம்: புது வசந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam