கண்ணா வருவாயா ..
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
(கண்ணா..)
நீலவானும் நிலவும் நீரும் நீயென காண்கிறேன்
உண்ணும்போதும் உறங்கும்போதும் உன் முகம் பார்க்கிறேன்
கண்னன் வந்து நீந்திடாது காய்ந்து போகும் பாற்கடல்
உன்னை இங்கு ஆடை போல ஏற்றுக்கொள்ளும் பூவுடல்
வேரில்லையே பிருந்தாவனம்
விடிந்தாலும் அம் ஆளிங்கனம்
சொர்க்கம் இதுவோ
(கண்ணா..)
மல்லிகைப் பஞ்சனை இட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மல்லிகைப் பஞ்சனை இட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தனல் சுந்தரவள்ளி
ராகம் சேர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தனல் சுந்தரவள்ளி
ராகம் சேர்க்கவா
கொடி இடை ஒடிவதன் முன்னம் மடியினில் எடுத்திடவா
மலர்விழி மயங்கிடும் வண்ணம் மதுரசம் கொடுத்திடவா
இரவு முழுதும் உறவு மழையிலே
இருவர் உடலும் நனையும் பொழுதிலே
ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே
(கண்ணா..)
படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், சித்ரா
வரிகள்: வாலி
Tuesday, February 8, 2011
கண்ணா வருவாயா
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
தேன் கிண்ணம்.....இனிமை வண்ணம்...
Post a Comment