Tuesday, June 3, 2008

479.நந்தவனத்தில் ஒரு இராஜகுமாரி..

தேன்கிண்ணம் என்னும் குழுபதிவு ஆரம்பித்த பொழுது இந்தளவுக்கு வரவேற்பும், நேயர் விருப்பமாக தினமும் பத்துக்கும் மேலான விருப்பபாடல்களும் வரும் என சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. சினிமா பாடல்கள் தவிர்த்து வேறு பிரபலமான பாடல்களும்(பாப் பாடல்,மேடை தனிபாடல்) அவ்வப்போது வலையேற்றி வருகிறோம். இனி வரும் வாரங்களிலிருந்து நபர் சார்ந்த விருப்ப பாடல்களை நேயர்விருப்பமாகவும், தேனிக்களின் விருப்பமாகவும் பகிர்ந்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம்.
அந்த வகையில் நடிகர் ராமராஜன் நடித்த திரைப்படங்களிலிருந்து சில பாடல்களை இந்த வாரம் முழுவதும் அளிக்கலாம் எனவும் முடிவு செய்துள்ளோம். உங்களின் விருப்பபாடல்களையும் நேயர்விருப்பமாகவும் கேட்கலாம்.


இந்தவாரத்தின் முதல் நேயர்விருப்ப பாடலாய் நாமக்கல் சிபி விரும்பி கேட்ட கரகாட்டகாரன் படத்தில் இடம்பெற்ற நந்தவனத்தில் ஒரு ராஜகுமாரி பாடல்.

கலக்கல் மேக்கப்'பும் அழகான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்மாக கலக்கும் ராமராஜனை பாருங்கள்.



சின்ன சின்ன காலெடுத்து மெல்ல மெல்ல எட்டு வைச்சு
கன்னியவ நெஞ்சு எல்லாம் அள்ளி அள்ளி கட்டி வைச்சா
அவ கண்ணை பார்த்தா மீனு அதை கண்டுபுட்டேன் நானு..

நந்தவனத்தில் ஒரு இராஜகுமாரி.. நந்தவனத்தில் ஒரு இராஜகுமாரி..

அவ நடையும், நல்ல உடையும் சின்ன இடையும்..
அட நமக்கு நமக்கு அட குமக்கு குமுக்கு...

நந்தவனத்தில் ஒரு இராஜகுமாரி.. நந்தவனத்தில் ஒரு இராஜகுமாரி..


படம்:- கரகாட்டக்காரன்
பாடியவர்:- இளையராஜா
பாடல்:- கங்கை அமரன்

இது போல் உங்களுக்கு விருப்பமான இராமராஜன் நடித்த படங்களிலிருந்து பாடல்களை கேட்கலாம்.

5 Comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ராம்,

"மதுரை மரிக்கொழுந்து வாசம்...என் ராசாத்தி" இந்த பாட்டை என் விருப்பமாக போட முடியுமா? :))

இராம்/Raam said...

//
"மதுரை மரிக்கொழுந்து வாசம்...என் ராசாத்தி" இந்த பாட்டை என் விருப்பமாக போட முடியுமா? :))//


மெளலி,

நீங்க கேட்ட பாட்டுக்களை போட்டுறலாம்.... நாளைக்கே சுனாமி ஒன்னு சுத்தியடிக்கும் பாருங்க.... :)

தமிழன்-கறுப்பி... said...

சூப்பரு...

தமிழன்-கறுப்பி... said...

சிபி அண்ணனுக்கு அந்தப்படத்தில இந்தப்பாட்டுதான் கிடைச்சுதா...

G.Ragavan said...

யப்பா ராமு... இந்தப் பாட்டுத்தான் படத்துலயே எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிச்ச பாட்டு. இந்தப் பாட்டைத் தேடித் தந்தமைக்கு நன்றி பல. இப்பிடியே..... அந்த "என் இனிய பொன்னிலாவே" படத்துப் பாட்டெல்லாம் குடுத்தா... ஹி ஹிஹி ஹி...

Last 25 songs posted in Thenkinnam