டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்ல தட்டாதே
பட்ட படிப்பு படிச்சு வந்தாலும் பாட்டி சொல்ல தட்டாதே
கொமரிக்கு அழகுண்டு கெழவிக்கு அறிவுண்டு
அழகுல அறிவ நீ மறக்காதே..
(டெல்லிக்கு....)
கட்சி ஒன்ன தேர்ந்தெடுத்தாலும் தாய்க்குலங்கள் ஆதரித்தாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
புட்டி வாங்கி விருந்து வெச்சாலும் பொட்டி பணத்த தொறந்து வெச்சாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
வாழ்க்கை இங்க அநியாயம் பெரியார் சொன்ன வெங்காயம்
வாழ்க்கை இங்க அநியாயம் நம்ம பெரியார் சொன்ன வெங்காயம்
மூத்தோர் சொன்ன வார்த்தை அது கடலில் விட்ட பெருங்காயம்
(டெல்லிக்கு....)
சேத்த பணத்த செலவழிச்சாலும் சொத்த மாத்தி எழுதி வெச்சாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
மந்திரியாக ஒசந்து நின்னாலும் மந்தையோரம் ஒதுங்கி நின்னாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
அழுத புள்ள ஜெயிக்காது அவுச்ச நெல்லு முளைக்காது
தங்கம் வெச்சு தேச்சாகூட எருமை நிறம் வெளுக்காது
(டெல்லிக்கு....)
பினாமி பேரில் நிலமிருந்தாலும் ஸ்விஸ்ஸு பேங்கில் பணமிருந்தாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
தலைவன் என்று கொடிகட்டும் போதும் சட்டசபையில் அடிபட்ட போதும்
பாட்டி சொல்ல தட்டாதே
வாழ்க்கை வெறும் சாப்பாடா புள்ள பெறும் ஏற்பாடா
வீடும் இந்த நாடும் நலம் காணும்படி நீ வாடா
(டெல்லிக்கு....)
படம் : பாட்டி சொல்ல தட்டாதே
இசை : சந்திரபோஸ்
Tuesday, June 10, 2008
491. டெல்லிக்கு ராஜான்னாலும்
பதிந்தவர் G3 @ 8:45 AM
வகை சந்திரபோஸ், மனோரமா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment