Sunday, June 22, 2008

525. பொன்னென்ன பூவென்ன கண்ணே




பொன்னென்ன பூவென்ன கண்ணே - உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே

( பொன்னென்ன பூவென்ன )

மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது

( பொன்னென்ன பூவென்ன )

ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்
ஒலியோடு நடை போடும் நீரோடையும்
சுகமானது சுவையானது
உன் வாழ்வும் அது போல உயர்வானது

( பொன் )

செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா

( பொன் )



படம்: அலைகள்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: ஜெயச்சந்திரன்

***

விரும்பிக் கேட்டவர்: ஜிரா

1 Comment:

G.Ragavan said...

நன்றி நன்றி நன்றி :-)

விரும்பிக் கேட்ட பாடலை உடனே தந்த வலைப்பூ வள்ளலே! நன்றி.

இந்தப் பாடல்தான் ஜெயச்சந்திரன் முதலில் தமிழில் பாடிய பாடல்.

இந்தப் பாடல் இயக்குனர் ஸ்ரீதரின் அலைகள் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது.

கன்னட நடிகரான விஷ்ணுவர்தன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதற்குப் பிறகு மழலைப் பட்டாளங்கள் படத்தில் கதாநாயகனாகவும்.. விடுதலை படத்தில் துணைக் கதாநாயகனாகவும் நடித்தார்.

Last 25 songs posted in Thenkinnam