ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கெட்டு போன பின்னால்
நம்ம பொழப்பு என்னாவதுங்க
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
(ஊரு விட்டு..)
அண்ணாச்சி என்னை எப்போதும் நீங்க தப்பாக எண்ண வேண்டாம்
பொண்ணால கெட்டு போவேனோ என்று ஆராய்ச்சி பண்ண வேண்டாம்
ஊருல உலகத்துல எங்க கதை போலெதும் நடக்கலையா?
வீட்டையும் மறந்துப்புட்டு வேற ஒரு நாட்டுக்கு ஓடவில்லையா?
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
இல்லே இல்லே..
மங்கயில்லாத ஓர் வெற்றியும் உண்டோ..
இல்லே இல்லே..
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கயில்லாத ஓர் வெற்றியும் உண்டோ..
காதல் ஈடேற பாடு என் கூட
(ஊரு விட்டு..)
ஆணா பொறந்தா எல்லாரும் உன்னை அன்பாக எண்ண வேண்டும்
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்ல வேறென்ன சொல்ல வேணும்?
வாழ்க்கைய ரசிக்கணும்ன்னா வஞ்சிக்கொடி வாசனை பட வேண்டும்..
வாலிபன் இனிக்கனும்ன்னா
உன்னை கொஞ்சம் ஆசையில் தொட வேண்டும்
கன்னியை தேடுங்க கற்பனை வரும்
ஆமா ஆமா
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
ஆமா ஆமா
கன்னியை தேடுங்க கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லாமல் காதல் பூமியில் ஏது?
(ஊரு விட்டு..)
படம்: கரகாட்டக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசிய வாசுதேவன்
Thursday, June 5, 2008
485. ஊரு விட்டு ஊரு வந்து
பதிந்தவர் MyFriend @ 3:00 PM
வகை 1980's, இளையராஜா, மலேசியா வாசுதேவன்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
வீடியோ எங்க Fபிரண்ட்...
இன்னொருமுறை சொல்லுங்க.:)
Post a Comment