Monday, June 16, 2008

505. வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

Vasandha Kaalangal - T. Rajendar


வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்

(வசந்த காலங்கள்)


கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா..அம்மம்மா
உன் மைவிழிக் குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனத்தினில் கமழ்வது தமிழ்மணமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்
மலையில் நெளியும் மேகக்குழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோத பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
நெஞ்சம் தாங்கிடுமோ

(வசந்த காலங்கள்)


மாதுளம் இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா அம்மம்மா
சுருள் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடெனும் கூந்தலை இடை வரைக் கண்டவளே
நூல் தாங்கும் இடையாள் கால் பார்த்து நடக்க நெளிகின்ற வடிவம்
மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கி குழல் கத்தை ஜாலம்
பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி
இதழ்கள் ஊறுமடி...இதழ் கள் ஊறுமடி

(வசந்த காலங்கள்)



படம்: இரயில் பயணங்களில்
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்: ஜெயச்சந்திரன்
பாடல்: டி.ராஜேந்தர்

1 Comment:

jeevanantham said...

என்ன ஒரு கவிதை அட அட.

Last 25 songs posted in Thenkinnam