கனவாக வந்த உறவு
கலைந்து போனதம்மா
கண்ணீரில் நனைந்த நெஞ்சு
கலங்கி வாடுதம்மா
சோதனை தீரவில்லை
சொல்லி அழ யாருமில்ல
முன்னப்பின்ன அழுததில்ல
சொல்லித்தர ஆளுமில்ல
சொல்லுங்க சொல்லுங்க
அழுத்திச் சொல்லுங்க
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்ல
வாழ்ந்து முடிச்சவன்
கூட்டிக் கழிச்சான்
கொண்டு போக இங்கு மிச்சமில்ல
(சோதனை தீரவில்ல)
சொந்தம் இங்கே யாரோ யாரோ
வந்த பந்தம் எல்லாம் கானல் நீரோ
முத்தெடுக்கப் போனேன் நானே
மூச்சடைச்சுப் போனேன் மானே
பாசம் ஒரு வேஷம் தானே
நம்புவது மோசம்தானே
சொல்லுங்க சொல்லுங்க
அழுத்திச் சொல்லுங்க
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்ல
பந்தத்தையும் ஒரு சொந்தத்தையும்
நம்பிக் கிடப்பதில் இங்கே அர்த்தமில்ல
யாரோ சொந்தம் யாரோ
யாரோ யாரறிவாரோ
ரோசாப்பூவூ எங்கே எங்கே
அது ராசா மார்பில் ஆடும் அங்கே
புத்திக் கெட்டுப் போனேன் தாயே
பொட்டு வச்சு வாழ்க நீயே
பூப்பறிச்ச பாவி நானே
பூ முடிச்சு வாழ்க மானே
நந்தவனம் ஒன்னு வெந்துவிடுமின்னு
தண்ணி கொண்டுவந்து காத்திருந்தேன்
அந்த வனத்திலே ஜீவநதி ஒன்னு
வந்து கலப்பதைப் பார்த்திருந்தேன்
(சோதனை தீரவில்லை)
படம்: செந்தூரப் பூவே
இசை: மனோஜ் க்யான்
பாடியவர்: ஜெயச்சந்திரன்
**
விரும்பிக் கேட்டவர்: லோஷன்
Sunday, June 22, 2008
526. சோதனை தீரவில்லை
பதிந்தவர் கப்பி | Kappi @ 11:54 PM
வகை 1980's, மனோஜ் க்யான், ஜெயச்சந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
என்ன ஒரு சோகம்.
Nice song and nice lyrics Captain sad good acting
Post a Comment