Wednesday, June 18, 2008

514. கொடியிலே மல்லிகைப்பூ

KODIYILE


கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே


மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால


பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
பாறையிலே பூ முளைச்சு பார்த்தவங்க யாரு
அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே


(கொடியிலே)



படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியோர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam