Monday, June 9, 2008

490.வா வாத்யாரே ஊட்டாண்டே

தமிழ் திரையுலக வரலாற்றில் தனிபெரும் இடத்தை இன்னமும் தக்க வைத்து கொண்டிருப்பதில் அதிலும் குறிப்பாக பெண் நடிகர்களில் மனோரமா முக்கியமானவர். அவருடைய திரையுலக வரலாற்றில் தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் அண்ணாதுரை,கலைஞர்,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என அனைவருடனும் சேர்ந்து நடித்தவர் என்ற பெருமையை பெற்றவர்.

மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி மாலையிட்ட மங்கையில் நகைச்சுவை நடிகையாக அறியப்பட்டார்.

முதன்முதலில் தன்னுடைய குரலில் பாடிய படம் பொம்மலாட்டம். அதில் இடம் பெற்ற இந்த பாடலை காணலாம்.




வா வாத்யாரே ஊட்டாண்டே நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு

வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சி நின்னு
அட சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சி நின்னு

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு

நைனா உன் நினப்பாலே நான் நாஸ்தா துன்னு நாளாச்சு
நைனா ஆ...
நைனா உன் நினப்பாலே நான் நாஸ்தா துன்னு நாளாச்சு
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்துஜால்னா நெனப்பு வந்தாச்சு
அட மச்சான் ஆ........
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்துஜால்னா நெனப்பு வந்தாச்சு

ஆயா கடை இடியாப்போன்னா பாயாக்கறியும் நீயாச்சு
ஆயா கடை இடியாப்போன்னா பாயாக்கறியும் நீயாச்சு
வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் ஒண்ணா சேந்து வாராவதிக்கே போவலாம்

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்

ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு

படம்: -பொம்மலாட்டம்
இசை:- வி.குமார்.


இந்த வாரம் முழுவதும் மனோரமா பாடல்கள் தேன்கிண்ணத்தில் இடம் பெறும். உங்களுக்கு விருப்பமான பாடல்களை நேயர்விருப்பத்தில் கேட்கலாம்.

4 Comments:

G3 said...

ஆரம்பமே கலக்கல் பாட்டு.. இந்த வாரம் முழுக்க அசத்தல்தான்னு சொல்லுங்க :)

பிரேம்ஜி said...

ஜாலியான ஒரு பாட்டு இது.

சின்னப் பையன் said...

//மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி மாலையிட்ட மங்கையில் நகைச்சுவை நடிகையாக அறியப்பட்டார்//

!!!!????

இராம்/Raam said...

//ச்சின்னப் பையன் said...

//மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி மாலையிட்ட மங்கையில் நகைச்சுவை நடிகையாக அறியப்பட்டார்//

!!!!????//

ச்சின்னப் பையன்,


அவங்க முதலிலே கதாநாயகியாதான் அறிமுகம் ஆனங்க. அப்புறந்தான் நகைச்சுவை கதாபாத்திரங்களிலே நடிக்க ஆரம்பிச்சாங்க... :)

நகைச்சுவை நடிகையானதுக்கு சரியான கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமே இருந்திருக்கலாம்...

Last 25 songs posted in Thenkinnam