தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே
தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே
இது வேறாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே
யாராலும் படிக்காத மங்கல ராகமே
(தானா வந்த..)
வண்ண வண்ண வளைவி போட்டு
வசமாக வளைச்சு போட்டு
என்னை கட்டி இழுத்து போகும் இளந்தேகமே
கூரப்பட்டு களைஞ்சிடாம குறை ஏதும் நடந்துடாம
ஆசைப்பட்டு அணைக்க வேண்டும் மகராசனே
முன்னே பின்னே அறிஞ்சதில்லை
முறையாக தெரிஞ்சதில்லை
சின்ன சின்ன தவறை நீயும் பொருத்தாக வேணுமே
புத்தகத்தில் படிக்கவில்லை புரியாமல் நடிக்கவில்லை
வித்தைகளை வெவரமாக வெளியாக்க வேணுமே
இந்த மேனி இன்ப தோனி
ராணி இந்த ராணி
இந்த ராஜனோட விருப்பமே
(தானா வந்த..)
முத்து நவ ரத்தினத்தோடு முழுசான லட்சணத்தோட
மெத்தையில நானும் கூட வரவேண்டுமே
முன்னம் ரெண்டு பவளத்தோட முன் வாயில் மதுரத்தோட
கண்ணனுக்கு காதல் விருந்து தரவேண்டும் நீ
தொட்டு தொட்டு சுகமும் கூட சுதியோடு கலந்து பாட
விட்டு விட்டு விலகி ஓடா முடியாமல் போகுமே
கொத்து மல்லி கொண்டையில் ஆட
குளிர்ப்பார்வை வண்டுகள் ஆட
புத்தம் புது செண்டுகள் ஆட
புது தாகம் தோணுமே
மெல்ல ராசா சொல்லு லேசா
ராசா இந்த ராசா
இந்த ராணியோட பொருத்தமே
(தானா வந்த..)
படம்: ஊரு விட்டு ஊரு வந்து
இசை: இளையராஜா
விரும்பி கேட்டவர்: மஜா
Sunday, June 15, 2008
503. தானா வந்த சந்தனமே
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment