Sunday, June 15, 2008

501. ஈர நிலா விழிகளை மூடி


Eera Nila - Aravindan

ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
(ஈர நிலா..)

நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ
இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே
போதும் இன்பம் போதும்
(ஈர நிலா..)

தாயான பூமாது தோள்மீது சாய்ந்திடும்போது
என் நெஞ்சில் பாலூரும் அன்பு தவிப்பு
தலைமுறை கண்டாலும் தாளாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும் உன் இன்ப அழைப்பு
சேரும் நதி ரெண்டுதான்
பாதை இனி ஒன்றுதான்
வெள்ளை மழை மண்ணிலே
தூறும் வண்ணம் சூடும்
(ஈர நிலா..)

படம்: அரவிந்தன்
இசை:யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஷோபனா
வரிகள்: வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam