துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல்
மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்
என் ரகசிய சலங்கையை ரசித்துவிட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே
என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்
பூவென நீ இருந்தால் இளம் தென்றலைப்போல் வருவேன்
நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன்
(துளி துளியாய்..)
பூமி எங்கும் பூப்பூத்த பூவில்
நான் பூட்டி கொண்டே இருப்பேன்
பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால்
நான் காற்று போல திறப்பேன்
மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே
நானும் அந்த மேகம் அதில் வந்து நானும்
உன்னை தான் முத்தம் இட்டு முட்த்ஹம் இட்டு போகிறேன்
ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழையில்
நனைந்திட நனைந்திட
(துளி துளியாய்..)
நீல வானில் அட நீயும் வாழ
ஒரு வீடு கட்டி தரவா
நீல வானில் என் கால் நடந்தால்
விண் மீன்கள் கொட்டும் தலையால்
ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்
மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்
பூ வனத்தை பூ வனத்தை கொய்து போகிறாய்
பெண் இனத்தை பொண் இனத்தை ரசிக்கிறாய்
கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே
உன்னை தழுவிட தழுவிட
(துளி துளியாய்..)
படம்: பார்வை ஒன்றே போதுமே
இசை: பரணி
பாடியவர்கள்: ஹரிஹரன், ஸ்வர்ணலதா
வரிகள்: பா. விஜய்
Sunday, June 15, 2008
498. துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment