மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம்பூதானோ
நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ
(மாஞ்சோலை கிளிதானோ)
நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
வளையோசையே காதிலே சிந்து பாடுதே
பளிங்குச்சிலையே பவழக்கொடியே
குலுங்கிவரும் இடையில் புரளும்
சடையில் மயக்கும் மலர்க்கொடி
(மாஞ்சோலை கிளிதானோ)
மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்
அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இதழ் தேன்தான்
அள்ளும் கரம் நான்தான்
மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள்
சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பண் பாடிடும்
பெண்ணோவியம் செந்தாமரையே
மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்
பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே
கரும்பு வயலே குறும்பு மொழியே
இளமையெனும் தனிமை நெருப்பை
அணைக்கும் பருவ மழைமுகில்
(மாஞ்சோலை கிளிதானோ)
படம்: கிழக்கே போகும் ரயில்
இசை: இளையராஜா
பாடல்: முத்துலிங்கம்
பாடியவர்: ஜெயச்சந்திரன்
Tuesday, June 17, 2008
508. மாஞ்சோலை கிளிதானோ
பதிந்தவர் கப்பி | Kappi @ 7:46 AM
வகை 1970's, இளையராஜா, முத்துலிங்கம், ஜெயச்சந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment