Friday, June 20, 2008

520. பூவிலே மேடை நான் போடவா




பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோள் இரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இதுதானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா


பூவிதழ் போல முல்லை என் பிள்ளை
புன்னகை செய்தால் கண்படும்
கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட
கண்ட என் நெஞ்சம் புண்படும்

அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி
அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி
நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்
வரவும் வேண்டி தினமும் தவமிருக்கும்

பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா


படம்: பகல் நிலவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா

3 Comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜெயச்சந்திரன் வாரத்துல கப்பி அடிச்சி ஆடி இருக்கீங்க.. :)

G.Ragavan said...

சின்னப் பாட்டுதான். ஆனா அழகான பாட்டு.

ஒரு சின்ன திருத்தம். பாடியவர் எஸ்.ஜானகி அல்ல. இசையரசி பி.சுசீலா அவர்கள்.

கப்பி | Kappi said...

கயல்விழி

அப்படிங்கறீங்க? :)))


ராகவன்

லேபிள் சரியா கொடுத்துட்டு உள்ளே ஏதோ அவசரத்துல ஜானகி-னு எழுதிட்டேன்...இப்ப மாத்தியாச்சு அண்ணாச்சி :)

Last 25 songs posted in Thenkinnam