நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா)
ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி
இவள் தான் சரணம் சரணம்
பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்
பாடலை விரும்பிக்கேட்டவர் : ஜிரா (எ) கோ.ராகவன்
பாடலைப்பாடியவர் : வாணி ஜெயராம்
இசையமைத்தவர் :இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
வருடம் : 1979
Wednesday, June 25, 2008
533.நானே நானா யாரோ தானா?
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 8:00 PM
வகை 1970's, இளையராஜா, வாணி ஜெயராம், வாலி
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
எனக்கும் இது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டுங்க..
ஆஹா..நான் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல்.. நன்றிப்பா..
அய்ய்யோ! பாடிப்பாடிப்பாடிப்பாடி மகிழ்ந்தேன்.
என் தெரிவுகள்.
1.யாரது, சொல்லாமல் நெஞ்சள்ளிப் போது
2.இதோ, இதோ என்னெஞ்சிலே ஒரே பாடல்
மத்த பாடல்கள் ஏற்கெனவே வெளியிட்டாச்சு. எதுக்கும் நாளைக்கு ஒரு தரம் வர்றேன்.
நன்றி கிரி..
--------
மங்கை அடிக்கடி நானும் முணுமுணுக்கும் பாடல் தான்ப்பா இது :) ..
-----------
முகவை மைந்தன் நன்றி.. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி ஏற்கனவே போட்டாச்சுங்க..
நான் விரும்பிய பாடல் ஏற்கனவே வந்து விட்டதா,. சரி கேட்கிறேன். நன்றிம்மா.
நானே நானா துளசியோட கூகிள் டாக்கில் கொஞ்ச நாள் இருந்தது:)
நீங்கள் இனிமேல் விரும்பிய பாடல்களை இங்கே தேன்கிண்ணம் தேடலில் அடிச்சுப்பாருங்க..இல்லன்னா கேட்டுட்டுங்க ..போட்டுடலாம்..
இந்த song கேட்கும்போதெல்லாம் ,ஜானகி & sushila வுக்கு கிடைத்த அங்கிகாரம் இவருக்கு கிடைக்கவில்லையோ என்று நினைப்பேன்.
ivarthan nijamave super singer
babu
Post a Comment