கத்தாழங் காட்டு வழி
கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே
வாக்கப்பட்டு போறவளே
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதும்மா
தங்கம் போல நான் வளர்த்த தங்கச்சி பிரியக் கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா
வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிப்புட்டா பாதி உயிர் போச்சு
(வண்டி மாடு எட்டு வச்சு)
அண்ணே போய் வரவா அழுது போய் வரவா
மண்ணே போய் வர்வா மாமரமே போய் வரவா
அணில் வால் மீச கொண்ட அண்ணே உன்னைவிட்டு
புலிவால் மீசை கொண்ட புருசனோட போய் வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம்தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம்தானே
(வண்டி மாடு எட்டு வச்சு)
படம்: கிழக்குச் சீமையிலே
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியோர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி
Thursday, June 19, 2008
515. கத்தாழங் காட்டு வழி
பதிந்தவர் கப்பி | Kappi @ 8:35 AM
வகை 1990's, AR ரஹ்மான், S ஜானகி, வைரமுத்து, ஜெயச்சந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment