ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய்
(ஒரு வானவில்)
வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா
மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே
கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா
(ஒரு வானவில்)
உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை
இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது
தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம்
(ஒரு வானவில்)
படம்: காற்றினிலே வரும் கீதம்
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி
***
விரும்பிக் கேட்டவர்: ரத்தினம்
Friday, June 20, 2008
518. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
இளையராஜா இசையில் வெளிவந்த இனிமையான பாடல். ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்....ஆகா...இனிமை.. இனிமை.. இனிக்க இனிக்க இளமை.
இதே படத்தில் சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் என்றொரு சிறந்த பாடலையும் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார்.
Post a Comment