Monday, June 16, 2008

504. ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு




ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது


(ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு)


கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே


(ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு)


மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

(ராசாத்தி)


படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்

***

தேன்கிண்ணத்தில் இந்த வாரம் பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள் ஒலிபரப்பப்படும். நேயர்கள் தங்கள் விருப்பப் பாடல்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இதுவரை தேன்கிண்ணத்தில் வந்த பாடல்கள் இங்கே சொடுக்கிக் கேட்கலாம்.

2 Comments:

ஆயில்யன் said...

//கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே///


அப்டியே தொடர்ச்சியாக பாடும் போது

ரொம்ப சூப்பரா இருக்கும் !

நல்லா இருக்கு :)))

ஆயில்யன் said...

//ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது//


கப்பியண்ணே.!

தேன்கிண்ணத்தை ஊடகமாக வைத்து உறவுக்கு சொல்லும் சேதியா இது...? :))))

Last 25 songs posted in Thenkinnam