காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணைச்சா நிம்மதியாகுமடி
(காத்திருந்து)
முக்குளிச்சு நானெடுத்த முத்து சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே பத்திரமா வச்சேனே
வச்ச இடம் காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே
தேன் வடிக்கும் பாத்திரமே தென் மதுரப் பூச்சரமே
கண்டது என்னாச்சு கண்ணீரில் நின்னாச்சு
(காத்திருந்து)
நீரு நிலம் நாலு பக்கம் நான் திரும்பிப் பார்த்தாலும்
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியில சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற என் மனசை
யார விட்டு தூது சொல்லி நானறிவேன் உம்மனசை
நெஞ்சமும் புண்ணாச்சு காரணம் கண்ணாச்சு
(காத்திருந்து)
படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்
****
விரும்பிக் கேட்டவர்: மஜா
Thursday, June 19, 2008
517. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பதிந்தவர் கப்பி | Kappi @ 6:42 PM
வகை 1980's, இளையராஜா, ஜெயச்சந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
சூப்பர் பாட்டு போட்டதற்கு நன்றி.... அருமையான குரல், இசை.. புரியறாமாதிரி வார்த்தைகள்... ம்...
Post a Comment