சின்னப் பூவே மெல்லப் பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
வண்ணப் பூவிழி பார்த்ததும் பூவினம் நாணுது
காலடி ஓசையில் காவியம் தோணுது
(சின்னப் பூவே)
பாவையின் தேன்குழல் மேகமோ
பொன்வானத்தில் வரைந்திடும் கோலமோ
கண்கள் நீரினில் நீந்திடும் மீன்களோ
எந்தன் காதலை மையெனப் பூசவோ
சின்னப் பாதங்கள் தாங்கிடும்
பொன்னெழில் மேனியை
அள்ளவோ கொஞ்சம் கிள்ளவோ
(சின்னப் பூவே)
வாலிபச் சோலையின் வாசமே
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே
ஆனந்த சங்கம சந்தமே
எந்தன் ஆசையில் விளைந்திடும் சொந்தமே
இன்பத் தென்றலின் பாதைகள்
எங்கிலும் ஆசைகள்
பொங்குதே உன்னைக் கெஞ்சுதே
(சின்னப் பூவே)
படம்: சின்னப் பூவே மெல்லப் பேசு
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடியவர்: ஜெயச்சந்திரன்
Friday, June 20, 2008
521. சின்னப் பூவே மெல்லப் பேசு
பதிந்தவர் கப்பி | Kappi @ 9:43 PM
வகை 1980's, SA ராஜ்குமார், ஜெயச்சந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
கானா பிரபா பாட்டையும் படத்தையும் கொடுக்கிறார் என்றால்... நீங்கள் வரிகளையும் கொடுக்கிறீர்... ஏதாவது பதிவுக்கு பாடல்வரிகள் தேவை என்றால் நான் உங்கள் பதிவுக்கு வந்து பாட்டை சுட்டு வார்த்தைகளை பிரயோகித்து கொள்கிறேன். நன்றி ஐயா.
80 ல வந்த படம்னு தோனுது. பிரபு, ராம்கி மற்றும் சுதா சந்திரன் நடித்தது.
நல்ல பாட்டு. S A ராஜ் குமார் எப்பவாது ஒரு நல்ல பாட்டு போடுவார் அதுல இது ஒன்னு.
ஓ.. ஜெயச்சந்திரன் வாரமா அதானே பாத்தேன், ஆனா கப்பி அண்ணன்தான் எல்லா பாட்டும் போடுறாரு ஜெயச்சந்திரன் ரசிகரோ..
அண்ணே ஒரு சந்தேகம் பூவே உனக்காக படத்தில "சொல்லாமலே" பாட்டு யார் பாடினதுண்ணே....?
வாவ்.. ஜெயச்சந்திரன் வாரமா! சூப்பர் :) நன்றி நன்றி நன்றி
அருமையான பாட்டுங்க இது. எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில வந்த நல்ல பாட்டுகள்ள இது ஒன்னு.
// தமிழன்... said...
ஓ.. ஜெயச்சந்திரன் வாரமா அதானே பாத்தேன், ஆனா கப்பி அண்ணன்தான் எல்லா பாட்டும் போடுறாரு ஜெயச்சந்திரன் ரசிகரோ..
அண்ணே ஒரு சந்தேகம் பூவே உனக்காக படத்தில "சொல்லாமலே" பாட்டு யார் பாடினதுண்ணே....? //
தமிழன், அதுவும் ஜெயச்சந்திரன் பாடியதுதான். எஸ்.ஏ.ராஜ்குமார் இசைதான். :)
Post a Comment