அம்புலி மாமா அம்புலி மாமா
அம்புலிமாமா நாந்தானே
வானத்து மதியை திருமதியாக்கி
கைத்தலம் பற்றி கொண்டேனே
அழகி பேரழகி எதிரில் நின்றாளே
அழகன் பேரழகன் எனை வென்றாளே
சுகமாய் ஹேய் கொன்றாளே
(அம்புலி மாமா..)
ஒரு குடை பிடித்து இருவரும் நடப்போம்
வெயிலிலும் ஹோய் மழையிலும்
அழகிய ஜோடி பரிசுகள் பெருவோம்
தினம் தினம் ஹோய் தினம் தினம்
உறக்கம் விழிகளை மூடிடும் போதும்
கனவில் இமைகளை திறப்போமே
முத்தத்தில் இரவை மூழ்கடிப்போமே
இருமுறை குளிப்போமே..
(அம்புலி மாமா..)
இவன் ஒரு பாதி உமதொரு பாதி
கோவிலில் ஹோந் கோவிலில்
இவன் ஒரு பாதி அவள் ஒரு பாதி
வீட்டினில் என் வீட்டினில்
உழவியில் அரிசியை போட்டிடும் போது
பக்கத்தில் இருந்து உதவனுமே
குழந்தை பெருகிற நேரத்தில் நானும்
அருகினில் இருக்கணுமே
(அம்புலி மாமா..)
படம்: பேரழகன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்
Saturday, June 14, 2008
496. அம்புலி மாமா அம்புலி மாமா
பதிந்தவர் MyFriend @ 3:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment