நாதமெனும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணை விட நீ கிடைத்தாய்.....
நாதமெனும் கோவிலிலே ........
இசையும் எனக்கிசையும் தினம்
என் மனம் தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும் - நீ
அசைத்தாய் நான் இசைத்தேன்
[நாதமெனும்...]
விலையே எனக்கிலையே தினம்
வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே - நான்
அழைத்தேன் உயிர் பிழைத்தேன்
[நாதமெனும்...]
இறைவன் என ஒருவன் எனது
இசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் - இன்று
அவன் தான் உன்னைக் கொடுத்தான்
[நாதமெனும்...]
படம்: மன்மதலீலை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: வாணி ஜெயராம்
பாடல்: கவிஞர் கண்ணதாசன்
Friday, June 27, 2008
537. நாதமெனும் கோவிலிலே
பதிந்தவர் ஜே கே | J K @ 12:16 PM
வகை 1970's, MS விஸ்வநாதன், கண்ணதாசன், வாணி ஜெயராம்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
//என்னை விட//
அது
"எண்ணெய் விட நீ கிடைத்தாய்"
Post a Comment