Friday, June 20, 2008

519. கவிதை அரங்கேறும் நேரம்




சப்த ஸ்வரதேவி உணரு
இனி என்னில் வர தானமருளு
நீ அழகில் மமமாவில் வாழும்
என் கருவில் ஒளி தீபமேற்று
சப்த ஸ்வரதேவி உணரு

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அறங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்
உன் அங்கம் தமிழோடு சொந்தம்
அது என்றும் திகட்டாத சந்தம்

(கவிதை அரங்கேறும்)


கைகள் பொன்மேனி கலந்து
மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து
இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு
மனம் கங்கை நதியான உறவை
இனி எங்கே இமை மூடும் நிலவை


(கவிதை அரங்கேறும்)


நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்த மாயம்
இந்த நிலைமை எப்போது மாறும்
என் இளமை மழை மேகமானால்
உன் இதயம் குளிர் வாடை காணும்

(கவிதை அரங்கேறும்)


படம்: அந்த ஏழு நாட்கள்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி

1 Comment:

G.Ragavan said...

எப்பேர்ப்பட்ட பாட்டுய்யா இது! ஒரு காலத்துல தமிழ்நாட்டையே கலக்கி...ஒரு இயக்குர்/நடிகர் மற்றும் நடிகைக்கு வாழ்வு கொடுத்த படமாச்சே! பாட்டாச்சே! இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்னு அத்தனை மொழியிலும் ஹிட். ஹிட்டோ ஹிட். அருமையான பாட்டைக் குடுத்தமைக்கு நன்றி பல.

Last 25 songs posted in Thenkinnam