Wednesday, September 1, 2010

சின்னப்பெண்ணான போதிலே

சின்னப்பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஓருநாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா
நீ சொல் என்றேன் ?

(சின்னப்பெண்ணான போதிலே)

வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல வாழ்விலே
இன்பம் தானென்றாள்
வெண்ணிலா நிலா

கன்னியென்னாசை காதலே
கண்டேன் மணாளன் நேரிலே
என்னாசை காதல் இன்பம் உண்டோ
தோழி நீ சொல் என்றேன்
வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல வாழ்விலே
இன்பம் தானென்றாள்
வெண்ணிலா நிலா

கண் ஜாடை பேசும் எந்நிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா
என் க்ண்கள் தேடும் உண்மை தனை
சொல் நிலவே நீ என்றேன்.
வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல வாழ்விலே
இன்பம் காணலாம்



திரைப்படம்:ஆரவல்லி
பாடியவர்கள் : ஜிக்கி , ஏ எம் ராஜா
இசை: ஜி. ராமநாதன்
பாடல்வரிகள்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

[பிரபல திகில் பட மன்னன் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் படமான, 'The Man who knew too much' என்ற படத்தில் வரும் டோரிஸ் டே (Doris Day) பாடிய 'கே செரா செரா' (Que Sera Sera) என்ற பாட்டின் தமிழ்ப் பதிப்பு இது]

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam