Thursday, May 9, 2013

நதி வெள்ளம் மேலே - தங்க மீன்கள்





நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென்சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்
அடி என் கண்ணின் இரு கருவிழிகள்
உன் முகத்தைத் தேடுதடி
கண்ணீர்த்துளிகள் காட்சியை மறைக்குதடி
என் காட்டில் ஒரு மழை வந்தது
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே
இடிமின்னல் விழுந்து காடே எரிந்ததடி

அலைந்திடும் மேகம்
அதைப் போல இந்த வாழ்க்கையே
காற்றின் வழியில் போகின்றோம்
கலைந்திடும் கோலம்
என்றபோதிலும் அதிகாலையில்
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்
உயிரே உன்னைப் பிரிந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் நான் அங்கு வாழும் நீதானே
எந்தன் உயிரே

மலர் ஒன்று விழுந்தால்
அதை ஏந்த பலர் ஓடுவார்
இலைகள் விழுந்தால் சருகாகும்
வறியவன் வாழ்க்கை
இலை போல என்றபோதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்
உயிரே உன்னைப் பிரிந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் நான் அங்கு வாழும் நீதானே
எந்தன் உயிரே



படம்: தங்க மீன்கள்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ராகுல் நம்பியார்

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான வரிகள்... நன்றி...

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்... (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_9.html)

Last 25 songs posted in Thenkinnam