Tuesday, March 3, 2009

982 பாலோடு தேன்கலந்த அபிஷேகம்



பாலோடு தேன்கலந்த அபிஷேகம்

1. பச்சைமணி பூங்கொடியாள், பதினெட்டாம் படி, டாக்டர். பாலமுரளி கிருஷ்னா
2. மன்மதன் கைக்கரும்பின், காஞ்சிக்காமாட்சி, டாக்டர். சீர்காழி கோவிந்தராஜன்
3. பழகும் தமிழே பார்த்திபன் மகனே, பார்த்திபன் கனவு, ஏ.எம்.ராஜா,பி.சுசீலா
4. அகப்பட்டவரையில், இப்படியும் ஒரு பெண், மனோரமா, பானுமதி
5. கண்டதும், அம்பிகாவதி, ஞானசரஸ்வதி,
6. பாலோடு தேன்கலந்த அபிஷேகம், ஞானக்குழந்தை, டி.எம்.சவுந்திராஜன், வாணிஜெயராம்
7. பக்தி கொண்டாடுவோம்,பட்டினத்தார், டி.எம்.சவுந்திரராஜன்
8. இந்த பச்சைக்குழந்தைக்கு ஒரு, நீதிக்கு தலைவணங்கு, எஸ்.வரலட்சுமி

ஒலித்தொகுப்பு வழங்கியவர்:

ஜெயலக்‌ஷ்மி பிச்சைமணி
அனுப்பர்பாளையம்
திருப்பூர்

பாடல் தலைப்புகளை பார்த்தவுடனே புருவங்கள் உயர்த்தியிருப்பீற்களே? ஏதோ இணையதளத்தை திறந்தாமோ பாடல் கேட்டோமா என்று இருந்து வருகிறோம். எப்பவாவது இதுப்போல் ஆக்கங்களை தர முயற்சி செய்திருக்கிறோமா? இல்லை அப்படித்தானே அதற்க்கு நேரம் காலம் தான் நமக்கு கிடைப்பதில்லை. நமக்காகவே, பாடல்கள் உள்ளே சென்று
நுட்பமாக ஒவ்வொரு வரியையும் ரசிக்கும் ரசிகர்கள் இன்றும் உண்டு அதுவும் பழைய பாடல்களை அலசி ஆராயும் இசையன்பர்கள் வானொலியில் ஏராளம் அவர்களின் ஒலித்தொகுப்புகள் தான் நான் தேன் கிண்ணத்தில் பதிந்து வருவது. அந்த வகையில் இதோ சென்ற வாரம் இரவின் மடியில் ஒலிப்பரபபிய ஓர் அற்புத சிந்தனைகளை உடைய திருமதி.
ஜெயலக்‌ஷ்மி பிச்சைமணி அவர்களின் பாடல் தொகுப்பும் ஒவ்வொரு பாடலை தான் ரசித்ததை தன் வார்த்தை ஜாலங்களில் சதிராடிவிட்டார். ஓலிப்பரப்பட்ட பாடல் தலைப்புக்களை மட்டும் உங்கள் பார்வைக்கு வழங்கியிருக்கிறேன். அதிகம் விவரங்கள் நான் எழுத விரும்பவில்லை ஏனென்றால் நேயரின் ரசனை வரிகளையும், ஒலித்தொகுப்பை
வழக்கம் போல் நம் ஆதர்ஸ அறிவிப்பாளர் “டிஜ்ஜிடல் குரலோன்” ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களின் குரல் அவர் பாணியிலே வழங்கியிருப்பது மிகவும் சிறப்பு. கேளுங்கள் உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.

முக்கியமாக, எனது இரவின் மடியில் தொகுப்பான அனங்கன் அங்கஜன், அன்பன் தொகுப்பில் ஒரு பாட்டை அனுப்பியிருந்தேன். அந்த பாட்டு பட்டியலில் இருக்கும் கடைசிபாடலான இந்த பச்சைக்குழந்தை பாடல் நேரம் போதாதால் என் ஒலித்தொகுப்பில் சேர்த்திருக்கிறார்கள் அந்த பாடல் பாடிய வரலட்சுமி அவர்களின் ரசிகன் எனது நண்பர் அகிலா விஜயகுமார் அவக்ரளூக்கு
பிடித்தமான பாடலை சேர்த்தது கேட்டு நானும் மகிழ்ந்தேன். இந்த ஒலித்தொகுப்பில் ஒரு சூசுமம் உள்ளது அது உங்களூக்கு புரியாது ஏனென்றால் வானொலி அன்பர்களுக்கு மிகவும் நன்றாக தெரியும் இருந்தாலும் அவை என்னவென்று தங்களூக்கு விளக்குவதில் எதுவும் தப்பில்லை என்று கருதுகிறேன். ஒலித்தொகுப்பை வழங்கிய நேயர் வானொலி அன்பர்களின் பெயர்களை தன் விளக்கங்களில் மிகநேர்த்தியாக சேர்த்து வழங்கியிருப்பது சிறப்பான திறமை. மிகவும் பாராட்டபட வேண்டிய ஒன்று.

வாழ்த்துக்கள் ஜெயலக்‌ஷ்மி அவர்களே.

Get this widget | Track details | eSnips Social DNA

3 Comments:

Anonymous said...

Adada! Indha Ariya thoguppirkai Smt.Jayalakshmi Pichaimani thanadhu Nerathai miga SELAVU Seidhu Vanoli anbargalukkai Nalla thoguppai VARAVU Vaithirukkirar. Nandrigal Vazhthukkal.Thoguppu idhil idampera uzhaitha Ravi sir avargalukkum Nandrigal Paaratukkal

Anonymous said...

VAANGA JADHEESAN SIR VANAKKANGAL ITHU POL ARIYA THOKUPPUKALUM NEENGALUM THARA MUDIYUM THAARUNGKAL YINAYA THALA ANBARKAL MIKAVUM KETTU RASIPAARKAL. UNGKAL URCHAKATHIRKU NANDRI. IINNUM NIRAYA VARUM. ADIKADI VAANGA.

G.Ragavan said...

அருமையான பாடல்கள். அரிய பாடல்களும் கூட. எட்டு பாட்டுகளும் இதயத்தை எட்டும் பாட்டுகளாயினும்...இதயத்துள் தூங்கும் இன்பத்தைத் தட்டும் பாடல்களாக மூன்று பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்வேன்.

பழகும் தமிழே பார்த்திபன் மகனே...வேதாவின் இசையில் மிக இனிய பாடல். ஏ.எம்.ராஜாவும் இசையரசி பி.சுசீலாவும் குழைந்து பாடிய இனிய பாடல்.

பாலோடு தேன் கலந்த அபிஷேகம்....ஞானக்குழந்தை படத்திற்கு இசை திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன். இந்தப் படத்தில் இன்னொரு இனிய பாடல் "ஓசை கொடுத்த நாயகியே".

இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்.... இந்தப் பாடலைத் தெரியாத தமிழிசை விரும்பியும் உண்டா? மெல்லிசை மன்னரின் இன்னிசையில் தாலாட்டிசையாக வரும் இந்தப் பாடலைப் பிடிக்காதார் பிடிக்காதாரே!

Last 25 songs posted in Thenkinnam