Wednesday, March 11, 2009

996. படிக்காதவன் - ஏ வெற்றிவேலா

ஏ வெற்றி வேலா நம்ம ஆட்டம்தான் எகுறுது தோழா
ஏ அடி ஜோரா நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா
பள்ளிக்கூடம் போகாமலே ஃபர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் ஆன கூட்டம் இது
பாடம் கீடம் படிக்காமலே நான் சொல்லும் அன்பான பாடம் இது
ஏத்தி விட்டா ஏத்தி விட்டா ஏறலாம் ஏறலாம் முன்னேறலாம்
சுத்தி சுத்தி உன்னை சுத்தி ஆட்டம்தான் போட்டுதான் கொண்டாடலாம்
(ஏ வெற்றி வேலா..)

என் பேரு ஊரில் படிக்காதவன்
ஆனாலும் பொய்யா நடிக்காதவன்
ஆறேழு டிக்ரீ முடிக்காதவன்
யார் காலும் வார துடிக்காதவன்
புரட்சி தலைவரு எங்கேடா படிச்சாரு?
டாக்டர் பட்டம் கொடுத்தாங்கப்பா
ஐயா கலைஞரு எழுதாத எழுத்தா
எந்த காலேஜ் போனாருப்பா?
நான் படிச்ச நல்ல பாடம்தான் இது இது
(ஏ வெற்றி வேலா..)

டெந்துல்கர் படிச்சது பத்தாவது
ஆனாலும் அடிச்சார் நூறாவது
அம்பானி காலேஜ் போனதுல்ல
ஆனாலும் பேரு வானம் போல
சைக்கிள் கடைதான் வச்சாங்க பசங்க
ஃப்ளைட்டு கண்டு பிடிச்சாங்கப்பா
தானா படிச்சு தனியாளா ஒருத்தன்
ட்ரெயினு செஞ்சு முடிச்சானப்பா
ஏய் அடிடா வெறும் மேளம்தான் பிப்பி டும்டும்
(ஏ வெற்றி வேலா..)

படம்: படிக்காதவன்
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: நவீன், ரஞ்சித்

5 Comments:

ஆயில்யன் said...

மீண்டும் வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன் :))))

நாமக்கல் சிபி said...

Thank god!

உயிர் போயி உயிரு வந்திருக்கு!

சந்தனமுல்லை said...

ஆகா..திரும்ப வந்தாச்சா..சூப்பர்!

Anonymous said...

சிபி சார்

//உயிர் போயி உயிரு வந்திருக்கு//

நிச்சயமா எனக்கும் தான்... நமது கடுமையான உழைப்பு என்றும் வீண்போவதில்லை. திரும்பவும் கொண்டு வர பெரும் முயற்சி செய்தவர்களூக்கு என் நன்றி. வாழ்த்துக்கள். 1000 ஆவது பாடல் லக்கி யாரோ? பரிசு ஏதாவது உண்டா? சொல்லிடுங்கப்பா...

Thamiz Priyan said...

மீண்டு(ம்) வந்ததற்கு வாழ்த்து(க்)கள்!

Last 25 songs posted in Thenkinnam