அன்று வந்தது இதே நிலா >> என்னபப்பொருத்தம் >> தொட்டால் பூமலரும்
செந்தூர்ர் முருகன் கோவிலில் >> பத்து பதினாறு முத்தம் முத்தம் >>
வெள்ளி கிழமை விடியும் வேளை >> பார்வை யுவராணி கண்ணோவியம்
|
அன்பர்களே சிவந்த மண் என்ற படத்தில் வரும் இந்த பாடல் இந்த ஒலித்தொகுப்பில் இறுதில் வருகிறது ஒலித்தொகுப்பை கேட்கும் முன்.
மங்கையர் தின வாழ்த்துக்கள் ஏன்? எதற்கு? ஆமாம் அன்பர்களே மங்கையர் தின வாழ்த்துக்கள் ஏன் வாழ்த்துகிறோம், எதற்கு பாராட்டுகிறோம் என்றோ நாம் யோசித்ததுண்டா?
எல்லோரும் வாழ்த்துகிறோம் என்று நாம் வாழ்த்துகிறோம் அப்படித்தானே? என்னடா இது? யார் இது என்று மங்கை, மகளிர்களே அவசரப்பட்டு ஆட்டோவை எடுத்து ரவுண்ட் கட்ட வந்துடாதீங்க அம்மணிகளே? அப்படி வந்தாலும் இந்த பதிவில் என்ன விசயம் என்று கேட்காவாவது வாருங்கள், கேளூங்கள். சரி சரி விசயத்துக்கு வருகிறேன்.
வழக்கம் போல மீண்டும் கண்டுபிடி, கண்டுபிடி என்று ஓர் சொல் ஒலித்தொகுப்பை எடுத்துக்கொண்டு உங்களை குழப்ப வந்துவிட்டேன் அன்பர்களே. நான் மேலே கேட்ட கேள்விக்கு இது வரை எத்தனை பேருக்கு காரணம் தெரிந்திருக்கும் என்று எனக்கு தெரியாது. அதிகபட்சம் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் இணைய தள நண்பர்களூம் தெரிந்து வைத்துருப்பார்கள்.ஏன் வாழ்த்துகிறோம் என்ற தெரியாத அன்பர்களூக்காக (என்னையும் சேர்த்து தான்) இதில் என் ஆதர்ஸ் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா தகவல்கள் திரட்டி ,அதாவது தெரியாதவர்களூக்காக
வழங்கியிருக்கிறார்.
மேலும். இதே போல் ஆக்கங்கள் தேர்ந்தெடுத்து வழங்குங்கள் இணையதள அன்பர்கள் மிகவும் ரசிப்பார்கள் (ரசிக்கிறீர்கள் தானே?) என்று நான் சென்ற பதிவில் அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். அவர் செவி மடுத்து மிகவும் சிரமப்பட்டு பாடல்கள் தேடி பிடித்து ஒரு நிகழ்ச்சியாக வழங்கியிருக்கிறார் மேலும் இதுபோன்று தொடரும் என்று நம்புவோம்.
ஏன் வாழ்த்துகிறோம் என்ற காரணத்தை நான் இங்கு எழுதப்போவதில்லை மாறாக நீங்கள் அவசியம் இந்த ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேட்டுதான் தெரிந்து கொள்ளவேண்டும். (ஹி..ஹி.. ஹி...அப்படியாவது கேட்ப்பீர்களோ என்ற ஓர் நப்பாசை தான்)
மிகவும் நான் ரசித்த இந்த ஒலித்தொகுப்பில் வழக்கம் போல் ஒர் சொல் எல்லாப்பாடல்களில் வருகின்றன. அது என்ன சொல் என்று எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறீர்களோ நீங்கள் தான் இணையதள அசகாயசூரர்கள். வழக்கம் போல் எத்தனை நேயர்கள் மண்டையை போட்டு குடைந்து கொள்கிறார்கள் என்று நீங்களே கேட்டுவிடுங்கள்.ஒருமணி நேரம் இந்த ஒலித்தொகுப்பு கேட்டு உங்கள் வேலை தடைப்பட்டால் அதற்கு நான் பொருப்பல்ல வேலைக்கு போகும் போதோ வரும்போது அல்லது ஓய்வு நேரத்திலோ ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேளூங்கள். மறகாம உங்கள் உணர்வுகளை ஒரு வரியில் எழுதிடுங்க ஆக்கத்தை உருவாக்கியவருக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.
மூச்சு முட்ட ஓடி வரும் ஓட்டப்பந்தய வீரர் ஓரு மரநிழலில் நின்று ஆசுவாசமாக மூச்சை இழுத்து இளைப்பறுவாரே அதேபோல் இந்த தளத்தில் அடித்து ஆடும் பதிவாளர்களுக்காக இறுதியாக இந்த பதிவை தேன் கிண்ணத்தில் 1000 ஆவது பாடலாக பதியவரும் பதிவாளருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். யாராக இருந்தாலும்
அவருக்கு முன்கூட்டியே என்னுடைய முதல் வாழ்த்துக்கள். அபப்டியே வெற்றி பெற்ற மேட்டுப்பாளையம் திருமதி.உமா ரவிச்சந்திரனுக்கும் வாழ்த்துக்கள்.
1 Comment:
அன்பர்களே இடையில் வருவதற்க்கு மன்னிக்கவும். நல்ல ஒலித்தொகுப்பு கேட்டு மகிழுங்கள். 1000 வது அதிர்ஸ்டசாலி யார் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Post a Comment