அன்பு உள்ளங்களே...
இதோ 1001 ஆவது பதிவாக நமது தளத்தின் பெயரிலேயே ஒரு ஒலித்தொகுப்பு இந்த பதிவு தான் முதல் என்று நினைக்கிறேன் (அதாவது தேன் கிண்ண பெயரிலே வருவது) எப்படி தேன் எத்தனை தடவை ருசித்தாலும் திகட்டாதோ அதே போல் தான் நம் மனதை வருடும் கீதங்கள்...அதுவும் பழைய கீதங்கள் எத்துனை முறை கேட்டாலும் தெவிட்டாதவை. இந்த ஒலித்தொகுப்பில் உள்ள பாடல்கள் பட்டியலை பாருங்கள் உங்களுக்கே தெரியும். நான் அதிகம் எழுதி உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. உடனே தரவிறக்கம் செய்து கேளூங்கள். உங்கள் உணர்வுகளை ஒரு வரியில் எழுதிடுங்கள். அதுசரி இவ்ளோ பாடல்கள் இருக்கும் போது ஏன் பொட்டு வைத்த முகமோ பாடல் மட்டும் டைட்டிலி கொண்டுவந்தீங்க என்று கேட்பது புரிகிறது சார். பாலுஜி ஒரு பேட்டியில் சொன்னது நினைவுக்கு வந்தது. இந்த பாடல் ஒலிப்பதிவு செய்த அன்றே இரவில் அகில இந்திய வானொலியில் சுடச்சுட ஒலிப்பரப்பினார்களாம். அதான் ஸ்பெஷலாக போட்டேன் நம்புங்க சார் வேறு ஒரு காரணம் இல்லை.. ஹி.. ஹி..ஹி..
ஒலித்தொகுப்பு உதவி நன்றி ரெயின்போ பண்பலை.
1.பாட்டுப்பாடவா,தேன்நிலவு,ஏ.எம்,ராஜா
2.அழகிய மிதிலை நகரிலே,அன்னை,பி.பி.ஸ்ரீனிவாஸ்,பி.சுசீலா
3.இந்த பொன்னான கைகள்,காதலிக்க நேரமில்லை,
4.எனக்குள்ளே நீ இருக்க,ஜீவனாம்சம்
5.கன்னி இவள் தேனிறைக்க,படித்தால் மட்டும் போதுமா,பி.சுசீலா
6.பிருந்தாவனமும்,
7.ராதைக்கேற்ற கண்ணனோ.சுமைதாங்கி,எஸ்.ஜானகி
8.நான் யார் என்பதை,துணைவன்,டி.எம்.எஸ்,பி.சுசீலா
9.ஆஹா மெல்ல நட,புதியபறவை, டி.எம்.எஸ்
10.செல்லக்கிளிகளாம்,
11.முத்துக்களோ கண்கள், நெஞ்சிருக்கும் வரை,டி.எம்.எஸ், பி.சுசிலா
12.அம்மாடி பொன்னுக்கு தங்கமனசு,
13.பொட்டு வைத்த முகமோ,சுமதி என் சுந்தரி,எஸ்.பி.பி,
14.வெள்ளிக்கிண்ணம் தான்,
4 Comments:
arumai
உங்கள் பாடல் தெரிவுகள் அருமை நிகழ்ச்சி தொகுப்பு அழகு.
http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI
keetu paarkkavum
வாங்க ராகினி மேடம்...
உங்கள் மறுமொழியை இந்த தளத்தில் கண்டு மிக்க மகிழ்ச்சி. உங்கள் வானொலி தொகுப்புக்கள் அனைத்தும் கிடைத்தன தனி மடல் எழுதுகிறேன். வருகைக்கும் கருத்துக்களூக்கும் நன்றி. வானொலி என்று இங்கே தேடி பாருங்கள் இன்னும் பல ஒலித்தொகுப்புக்கள் கோவை வானொலி நேயர்களின் அதிஅற்புதமான ஆக்கங்கள் கிடைக்கும் உங்களூக்கும் உதவிகரமாக இருக்கும் நேரம் கிடைக்கும் போது தரவிறக்கம் செய்து கேட்டு பாருங்கள். உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள்.
excellent collection. thanks for sharing
Post a Comment