Thursday, April 30, 2009

மலரென்ற முகமின்று சிரிக்கட்டும

மே ஒன்றாம் தேதி பிறந்தநாளைக்கொண்டாடும் சென்ஷிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நாகேஷை நினைத்தாலே ஞாபத்துக்கு வரும் அவளுக்கென்ன ஏற்கனவே ஒலிபரப்பப்பட்டுவிட்டது அடுத்தது இந்தப்பாடல் தான். சென்ஷியின் குரு நாகேஷ் பாட்டையே அவருக்கு பரிசளிப்போம்.




மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்
மனமென்ற கருவண்டு பறக்கட்டும் ( மலரென்ற)
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும் ( மலரென்ற)

டுய்யூ டுய்யூ டுய்யூடூ
ஆடிடும் சின்ன உடல்
பாடிடும் வண்ண இதழ்
அஞ்சிடும் வஞ்சி இடை
கெஞ்சிடும் பிஞ்சு நடை( அஞ்சிடும்)
அல்லித்தண்டு
வெள்ளித்தண்டை
முத்துச்செண்டு கன்னங்கள்
மின்னல் என்று மின்னக்கண்டுத்
துள்ளிச்செல்லும் எண்ணங்கள்
(மலரென்ற)


பொன்மகள் காதல் அன்னம்
பூமகள் கண்கள் மின்னும் (பொன்மகள்)
நெஞ்சமே துள்ளும் வண்ணம்
கொஞ்சுவாள் தங்க கிண்ணம்(நெஞ்சமே)
முல்லைப்பூவும் சேர்ந்து வந்த கன்னிப்பூ
கொள்ளை கொள்ள இங்குவந்தாள்
கோலம் கொள்ளும் தாழம்பூ
( மலரென்ற )



திரைப்படம் : காதலிக்க நேரமில்லை
பாடியவர் : எல். ஆர் . ஈஸ்வரி.
இசையமைத்தவர்:விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்

14 Comments:

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சென்ஷி :)))

Thekkikattan|தெகா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சென்ஷி :) !!

Good job, muthu!

கோபிநாத் said...

மாப்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)

MyFriend said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே. :-)

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! சொல்லவே இல்லையே? என் அன்பழிப்பாக இந்த கேக்கை கொடுக்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே!

ஜியா said...

வாழ்த்துக்கள் தல...

துளசி கோபால் said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் சென்ஷி.

நல்லா இருங்க.

☀நான் ஆதவன்☀ said...

பிறந்தநாள் வாழ்த்துகள் சென்ஷி!!!

கோபிநாத் said...
This comment has been removed by the author.
அபி அப்பா said...

என் அன்பான வாழ்த்துக்கள் சென்ஷிக்கு!

Thamiz Priyan said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே!

சென்ஷி said...

அழகான பாடல்.... அதையும் டைப்படித்து ஓஹ்.. ரொம்ப நன்றி அக்கா..

வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்ட,

ஆயில்யன்
தெகா
கோபிநாத்
மைபிரண்டு
உஷா
விக்கி
ஜி
துளசி டீச்சர்
நான் ஆதவன்
அபி அப்பா
தமிழ் பிரியன்

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

Anonymous said...

லேட்டாக என் வாழ்த்துக்களும். ரொம்ப நல்லா இருங்க.

பதிவுகள போடுங்கப்பா... ரொம்பதான் யோசிக்கிறீங்க போல..

Last 25 songs posted in Thenkinnam