எனக்கே எனக்கா மதுமிதா மதுமிதா
ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
ஃபிஃடி கேஜி தாஜ்மஹால் எனக்கே எனக்கா
ஃப்ளைக்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
பாக்கேட் சைஸில் வெண்ணிலவு எனக்கே எனக்கா
ஃபேக்ஸில் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா
முத்த மழையில் நனைஞ்சுக்கலாமா
கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா
உன்னை எடுத்து உடுத்திக்கலாமா
உதட்டின் மேலே படுத்துக்கலாமா
பட்டுப் பூவே குட்டித் தீவே
விரல் இடைத்தொட வரம் கொடம்மா
(ஹைர..)
அன்பே இருவரும் பொடிநடையாக
அமேரிக்காவை வலம் வருவோம்
கடல்மேல் சிவப்பு கம்பளம் விரித்து
ஐரோப்பாவில் குடி புகுவோம்
நம் காதலை கவிப்பாடவே ஷெல்லியின் பைரோனின்
கல்லரை தூக்கத்தை கலைத்திடுவோம்
விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய்
உன்னோடு நான் என்னானதோ
கும்மாளமோ கொண்டாட்டமோ
காதல் வெறிய்இல் நீ காற்றை கிழிக்கிறாய்
பிள்ளை மனம் பித்தாகுமோ
என்னாகுமோ ஏதாகுமோ
வாடைக் காற்றுக்கு வயசாச்சு
வாழும் பூமிக்கு வயசாச்சு
கோடியுகம் போனாலென்ன
காதலுக்கு எப்போதும் வயசாகாது
(ஹைர..)
ச்செர்ரிப் பூக்களை திருடும் காற்று
காதில் சொன்னது ஐ லவ் யூ
சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை
என்னிடம் சொன்னது ஐ லவ் யூ
உன் காதலை நீ சொன்னதும்
தென்றலும் பறவையும்
காதல் தோல்வியில் கலங்கியதே
ஒற்றைக் காலிலே நின்றாடத்தான்
பூமாலையே பூச்சூடவா
சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது
உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா
இதயம் துடிப்பது நின்ற்ஆலும்
இரண்டு நிம்டம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால்
ஒரு கணம் என்னுயிர் தாங்காது
(ஹைர..)
படம்: ஜீன்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், SP பல்லவி
Saturday, March 7, 2009
988. ஹைர ஹைர ஹைரப்பா
பதிந்தவர் MyFriend @ 12:30 AM
வகை 1990's, AR ரஹ்மான், SP பல்லவி, உன்னி கிருஷ்ணன், சுரேஷ் பீட்டர்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
//ஒற்றைக் காலிலே நின்றாடத்தான்
பூமாலையே பூச்சூடவா//
ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பதே உன் கூந்தலில் நின்றாடத்தான்
பூமாலையே பூச்சூடவா
//நம் காதலை கவிப்பாடவே ஷெல்லியின் பைரோனின்
கல்லரை தூக்கத்தை கலைத்திடுவோம்//
நம் காதலை கவி பாடவே ஷெல்லியின் பைரனின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்
Post a Comment