Monday, January 10, 2011

பேசா மடந்தையே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே

இதயமெனும் பூப்பறித்தேன்
நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன்
கையில் கொடுத்தேன் கண்ணே
நீ காலில் மிதித்தாய் பெண்ணே
(பேசா மடந்தையே..)

ஏழு நிறங்களை எண்ணி முடிக்கும் முன்
வானவில் கரைந்தது பாதியிலே
மறுபடி தோன்றுமா பார்வையிலே
பெண்ணின் மன நிலை கண்டு தெளியும் முன்
வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே
வானம் நடுங்குது மயக்கத்திலே

காதலை சொல்லி கரம் குவித்தேன்
கற்புக்கு பழி என்று கலங்குகிறாய்
பூஜைக்கு உனக்கு பூப் பறித்தேன்
பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய்

வார்த்தைகளால் காதலித்தேன்
ஜாடைகளால் சாகடித்தாய்
மழை தான் கேட்டேன் பெண்ணே
இடி மின்னல் தந்தாய் கண்ணே
(பேசா மடந்தையே..)

மூங்கில் காட்டிலே தீயும் அழகுதான்
ஆனால் அதை நான் ரசிக்கவில்லை
ஐயோ இதயம் பொறுக்கவில்லை

கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான்
ஆனால் அதை நான் சுகிக்கவில்லை
சகியே என் மனம் சகிக்க வில்லை

உன் சினம் கண்டு என் இதயம்
உடம்புக்கு வெளியே துடிக்குதடி
உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று
என் மனம் நான்காய் உடைந்ததடி

விதை உடைந்தால் செடி முளைக்கும்
மனம் உடைந்தால் புல் முளைக்கும்
தண்டனை என்பது எளிது
உன் மௌனம் வாலினும் கொடியது
(பேசா மடந்தையே..)

படம்: மொழி
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam