Sunday, January 9, 2011

பிள்ளை தாமரை பிள்ளை தாமரை



பிள்ளை தாமரை பிள்ளை தாமரை
அழுவது ஏனம்மா
விழியில் தேங்கிய கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா

இந்த தாழ்வார வீட்டுக்குள் தெய்வம் நீ
என் தாய்ப்போல வாழ்கின்ற ஆதாரம் நீ
விழியோரம் கண்ணீரை வேரோடு அறுப்பாய்
(பிள்ளை..)

ஓஹோ நூறு பூக்களும்
ஓர் காம்பில் பூக்கும் காலங்கள்
இது தானடி ஓ இதுதானடி
இரண்டு வீட்டுக்கு
ஓர் வாசல் இங்கு காண்கிறோம்
நாம் தானடி ஓ நாம்தானடி
ஒரு சிலந்தி கூட்டமாய்
பாச வலைகள் பின்னுவோம்
ஒரு வைக்கோல் கூட்டுக்குள்
பல குருவியாய் வாழ்கிறோம்
நம் கைகளிலே நம் கைகளிலே
ஆயுள் ரேகை நூறு ஆண்டு
அதில் கனிக்கும்
ஒருவர் விழியில் ஒருவர் விழிப்போம்
(பிள்ளை..)

ஓ விண்மீன் பந்தலில்
நாம்தானே வாழ்கின்றோம்
நிலவின் மடியினில்
நாம்தானே துயில்கிறோம்
இங்கு நான் உன்னை கை சேர
ஏதோ ஒரு தவம்
செய்தேனடா ஓ செய்தேனடா
ஒரு மெழுகின் குடும்பமாய்
தினம் உருகி கரைகிறோம்
சிறு எறும்பின் வரிசையாய்
ஒரு வழியில் நடக்கிறோம்
இது யார் அறிவார் இது யார் அறிவார்
ஊரும் பார்த்தால் என்ன சொல்ல
கண் படுமே
விரலாய் இருக்க மரமாய் பிறந்தோம்
(பிள்ளை..)

படம்: ஆல்பம்
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam