Saturday, October 6, 2012

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்




கருப்பு நிலா கருப்பு நிலா

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

சின்ன மானே மாங்குயிலே
உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன்
இந்த பூமி வாழும் வரை
எட்டு திசையாவும்
கட்டி அரசாள வந்த ராசா நீதானே

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

பத்து மாசம் மடி ஏந்தி
பெத்தெடுத்த மகராசி
பச்சப்புள்ள உன்னை விட்டு
போனத எண்ணி அழுதாயா
மாமன் வந்து எனை காக்க
நானும் வந்து உனை காக்க
நாம் விரும்பும் இன்பம் எல்லாம்
நாளை வரும் நமக்காக
காலம் உள்ள காலம்
வாழும் இந்த பாசம்
பூ விழி இமை மூடியே
சின்ன பூவே கண்ணுறங்கு

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

வண்ண வண்ண முகம் காட்டி
வானவில்லின் நிறம் காட்டி
சின்ன சின்ன மழலை பேசி
சித்திரம் போல் மகனே வா
செம்பருத்தி மலர் போலே
சொக்க வல்லி மணி போலே
கன்னம் இரண்டும் மின்ன மின்ன
கண்மணியே மடி மேல் வா
பாட்டு தமிழ் பாட்டு பாட அதை கேட்டு
ஆடிடும் விளையாடிடும் தங்க தேரே நீ தானே

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

என் மானே மாங்குயிலே
உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன்
இந்த பூமி வாழும் வரை
எட்டு திசையாவும்
கட்டி அரசாள வந்த ராசா நீதானே

படம் :என் ஆசை மச்சான் (1994)
இசை : தேவா
பாடியவர் : சித்ரா
வரிகள்: வாலி

2 Comments:

Easy (EZ) Editorial Calendar said...

அருமையான பாடல் வரிகள்..எவ்வளவு காலம் ஆனாலும் சலிக்காது..

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் said...

இசையும் தாலாட்டும்...

Last 25 songs posted in Thenkinnam