Saturday, October 13, 2012

உன் உதட்டோர சிவப்பே



உன் உதட்டோர சிவப்பே
அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும்
நீ சிரிச்சாலே சில நேரம்
அந்த நிலவு வந்து உளவு பாக்கும் உளவு பாக்கும்

என் செவ்வாழை தண்டே ஏ
என் செவ்வாழை தண்டே சிறுக்காட்டு வண்டே
உன்ன நெனச்சு தான் இசை பாட்டு
கொஞ்சம் நெருங்கி வா இதை கேட்டு

ஏன் மம்முதா அம்புக்கு ஏன் இன்னும் தாமதம்

அடி ஏ அம்மணி வில்லு இல்ல இப்போ கைவசம்

ஹே மல்லுவேட்டி மாமா மனசிருந்தா மார்க்கம் இருக்குது

என்ன பொசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது

என் சேலைக்கு கசங்கி விடும் யோகம் என்னைக்கி

அட என் வேட்டிக்கு அவுந்து விடும் யோகம் இன்னிக்கி

முருகமலை காடுக்குள்ள விறகெடுக்கும் வேளையிலே
தூரத்துல நின்னவளே தூக்கி விட்டாலாகாதா

பட்ட விறகு தூக்கி விட்டா கட்டை விரலு பட்டுபுட்ட
விறகில்லாம தீ புடிக்கும் வெட்கம் கெட்டு போகாதா

நீ தொடுவத தொட்டுக்கோ சொந்தத்துல வரைமுறை இருக்கா

நீ பொம்பளை தானே உனக்கு அது நியாபகம் இருக்கா

உன் நெனப்புத்தான் நெஞ்சுகுள்ள பச்சை குத்துது

உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது

சிங்கம் புலி கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும்
பொட்டுக்கன்னி உன்ன கண்டா புலி கூட தொடை நடுங்கும்

உம்ம நெனச்சு பூசையிலே வேப்பெண்ணையும் நெய் மணக்கும்
நீ குளிச்ச ஓடையிலே நான் குளிச்ச பூ மணக்கும்

ஹே வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குற

என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குற

அடி என் நெஞ்சிலே ஏண்டியம்மா வட்டி வைக்கிற

உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்கிற

படம்: பாஞ்சாலங்குறிச்சி (1996)
இசை: தேவா
பாடியவர்கள் : ஹரிஹரன் , அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: சினேகன்

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பாடல்...

பாடல் வரிகளுக்கு நன்றி...

Anonymous said...

பாடலாசிரியர் வைரமுத்து

Last 25 songs posted in Thenkinnam