Monday, October 15, 2012

தாண்டவம் - உயிரின் உயிரே

உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும் போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தாண்டி வாழ வேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும் போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும்

சாயங்காலம் சாயும் நேரத்தில் தோழி போல மாறுவேன்
சோர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில் தாய போல தாங்குவேன்
வேறு பூமி வேறு வானம் தேடியே நாம் போகலாம்
சேர்த்து வைத்த ஆசையாவும் சேர்ந்து நாமங்கு பேசலாம்
அகலாமலே அணுகாமலே இந்த நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும் போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும் 

தண்டவாளம் தள்ளி இருந்தது தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது என்னுள் உன்னை தேடத்தான்
ஐந்து வயது பிள்ளை போலே உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பதிக்கவா
நிகழ்காலமும் எதிர்காலமும் இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தாலுமே இறக்காமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே

உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும் போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தண்டி வாழ வேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

படம் : தாண்டம் (2012) 
இசை : பிரகாஷ் குமார் 
பாடியவர்கள் : சைந்தவி, சத்யபிரகாஷ்  
வரிகள் : நா. முத்துக்குமார்

1 Comment:

Anonymous said...

மூதேவி நீ கேட்ட கேட்டிட்க்கு பாட்டு வேறை

Last 25 songs posted in Thenkinnam