Monday, October 15, 2012

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு



பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வால் ருசி கண்டேன்

நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே
பிரிவது ஏது பெண்ணே உயிரை பரிமாறு
இணையும் பசுவைப்போல் நீ இணைந்தாய்
என் நெஞ்சில் தன்னாலே
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வால் ருசி கண்டேன்

பூ பூத்திருக்கும் முல்லை கொடி தான்
பூ பூத்துவைத்து காத்து இருங்கள்
திருமண மாலைக்கு தேதி சொல்லி
பறித்துக் கொள்வோம்
தேன் சுமந்திருக்கும் பெண்ணை மறந்தால்
தேன் சேர்ர்த்து வைத்து காத்திருங்கள்
திருமண இரவுக்கு தேவைப்படும்
எடுத்துக் கொள்வோம்

ஹேய் கங்கா சிந்தாமல் நின்றாடுங்கள்
நீ வாட பன்னீரைத்தான் தூவுங்கள்
முத்தம் சிந்தவா கண்ணோடு கண்ணோடு
முத்துக் குளிக்க நெஞ்சோடு நெஞ்சோடு
மொத்தத்தில் உன்னைக்கொடு

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வால் ருசி கண்டேன்

நான் மௌனங்களில் கதைப்படித்தேன்
நீ செய்கைகளில் மொழி பெயர்ந்தாய்
நாணத்தின் சாயத்தை முத்தமிட்டு முத்தமிட்டு
நீ கருத்தாய்
என் கனவுகளின் உருவங்களை
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்
வலைகளின் ஒலிகளை வாலிப தூக்கத்தை
கலைத்து விட்டாய்

உன் மார்பு சுத்தாத குற்றாலமே
உன் பெயரை சொன்னாலும் சங்கீதமே
முத்தம் கொடுப்போம் சொல்லாதே சொல்லாதே
சொல்லி சொல்லியே கொல்லாதே கொல்லாதே
உன் கைகள் இடம் மாறுதே

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வால் ருசி கண்டேன்

நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே
பிரிவேது பெண்ணே உயிரை பரிமாறு
இணையும் பசுவைப்போல் நீ இணைந்தாய்
என் நெஞ்சில் தன்னாலே
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே

படம்: முகவரி (2000)
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்

வரிகள் : வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam