Wednesday, October 10, 2012

நாகமலை சாய்ஞ்சுடுச்சே



நாகமலை சாய்ஞ்சுடுச்சே நட்டச்செடி காய்ஞ்சுடுச்சே
வாழும் விதி பாய்ஞ்சுடுச்சே
ஒத்த கல்லு சொன்ன சொல்லு
உன் உசுரை வாங்கிடுச்சே
விதியே உன் விதியே

என் சூரியன் சூரியன் சட்டுனு சட்டுனு இருட்டாய் போனது ஏனோ
என் சந்திரன் சந்திரன் பட்டுனு பட்டுனு உடைஞ்சே போனது ஏனோ
விதி கண்ணீரு சிந்தாம அணையாத ஜோதி
இந்த கதைய எழுதிய விதியை பார்த்து கேட்டானொரு கேள்வி
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

ஏய் வானம் கேட்கல பூமி கேட்கல வெயிலும் கேட்கல மழையும் கேட்கல
காத்தும் கேட்கல கடவுள் கேட்கல மனுஷன் கேட்குறானே
மனுஷன் கேட்குறானே

அந்த பறவை கேட்கல மிருகம் கேட்கல
பாம்பு கேட்கல பல்லி கேட்கல
நாயும் கேட்கல பேயும் கேட்கல மனுஷன் கேட்குறானே

அவன் நாக வம்ச புள்ள  இங்க யாரும் ஈடு இல்லை
தன் தலையைப் பார்த்துத் தானே அவன் திருப்புறானே வில்லை

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்டா

இந்த மரணப்பாதையின் தூரம் ரொம்ப தூரமோ
வரும் மரணம் பார்த்து வரும் வலிகள் ரொம்ப பாரமோ

இந்த உயிரும் பறந்து ஒரு புகையை போல போகுமோ
இந்த உயிரும் போன பின்பு மூளும் பகையும் போகுமோ
அன்பில்லாத உலகம் பண்பில்லாத நரகம்
இந்த தேகம் தாகம் எல்லாம் இனிமேல் தீயில் வேகும் விறகு
அந்த நோகும் கேட்கல தீயும் கேட்கல
மாடன் கேட்கல காடன் கேட்கல
ஈசன் கேட்கல எமனும் கேட்கல
மனுஷன் கேட்குறானே
உசுர கேட்குறானே என் உசுர கேட்குறானே

அவன் மரணம் சொல்லும் கதை மண்ணில் வீழ்ந்த விதை
என்றும் வாழ்பவனை என்ன செய்யும் சிதை
வெயிலாய் நிலவாய் காற்றாய் வாழ்வானே
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

அவன் தான்

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

அரவான் அரவான் அரவான் அரவான்
அரவான்  அரவான்  அரவான்

நந்தகுமாரா
நவநீத கண்ணா மாயன் முகுந்தா

நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
எங்கள் பெருங்காதல் தீர்க்கின்ற மன்னன் மன்னன் மன்னன்
நந்தகுமாரனை பார்த்தேனோ பார்த்தேனோ பார்த்தேனோ
பார்த்தேனோ

குளிர் கூதல் வரும் போது அனல்தானவன்
தளிர் கைகள் தொடும் போது தனப்பானவன்
இருகொங்கை அனல் மேட்டில் புனல்தானவன்
இருகொங்கை அனல் மேட்டில் புனல்தானவன்
மிருதங்கம் இடை சேரும் குரல்தானவன்

நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
எங்கள் பெருங்காதல் தீர்க்கின்ற மன்னன் மன்னன் மன்னன்
நந்தகுமாரனை பார்த்தேனோ பார்த்தேனோ பார்த்தேனோ
பார்த்தேனோ

படம் : அரவான் (2011)
இசை : கார்த்திக்
பாடியவர் : கோபால், சீர்காழி G. சிவசிதம்பரம், சுபிக்ஷா
வரிகள்: நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam