Friday, October 19, 2012

கண்ணோடு கண்ணான என் கண்ணா

கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
அன்னை உன்னை அடித்தாளோ சாமி
பிஞ்சு நெஞ்சு வலிக்காதோ சாமி
அன்னையும் நான் தானே
உன் அப்பனும் நான் தானே
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உனை யாரடித்தார் அப்பா

நல்ல தாயின் கண்ணிரண்டில் கோபம் வந்த மாயமென்ன
பாசம் நெஞ்சில் இருந்தாலும் நடிப்பதில் லாபமென்ன
வெண்ணையைக் கண்ணன் போல் திருடி விட்டாயோ
வீதியில் மண்ணெல்லாம் தின்று விட்டாயோ
அம்மா மண்ணைத் திங்க நான் சிறுவனோ
மாயவனோ கிறுக்கனோ நீயே பாரு

வெறுப்பது அம்மா தான்
வெறுப்பது அம்மா தான் விட்டு விட்டு போகாதே
கோழி ஒண்ணு குஞ்சை  மிதிச்சா சேதங்கள் வாராதே
அழுகை வராதோ எனக்கு அழுகை வராதோ
ஊர விட்டுப் போனாலும் போக ஒரு ஊரி்ல்லை
சொந்தம் பந்தம் பாத்தாலும் சோறு தர ஆளில்லை
பக்கத்துல அவ இருந்தா பசியே எடுக்காது
கோபத்துல அடிச்சாலும் கொஞ்சமும் வலிக்காது
போடம்மா போடு நல்லா போடு இன்னும் போடு போடு
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா

சின்னப் பையன் நீயல்ல அள்ளி வைத்து தாலாட்ட
பெரிய பையன் நீயல்ல புத்திமதி நான் சொல்ல
அனாதையாய் வாழ்ந்தது அடடா அன்று
இப்போது நான் கொண்டது பி்ள்ளைகள் ரெண்டு
சொந்தம் என்பது
சொந்தம் என்பது தொடர்கதை ஆனது
பந்தம் என்பது விடுகதை ஆனது
வாழ்வே விடுகதை ஆனது
என்னம்மா மனசுக்குள் பாரமா

கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா

அன்னை என்னை அடித்தாளே சாமி
பிஞ்சு நெஞ்சு வலிக்காதோ சாமி
அன்னையும் நான் தானே உன் அப்பனும் நான் தானே

கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா

படம் : சிப்பிக்குள் முத்து
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் : வைரமுத்து

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடித்த பாடல்...

பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி...

Last 25 songs posted in Thenkinnam