Sunday, September 25, 2011

இகலோகமே இனிதாகுமே




இகலோகமே இனிதாகுமே
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே
(இகலோகமே)

விழியின்றி ஓவியம் அழகாகுமா?
விரலின்றி வெறும் வீணை ஒலிகாணுமோ?
மழையின்றியே பயிர் வாழுமா?
மனமேவும் அன்பின்றி நலம்சேருமா?

இகலோகமே இனிதாகுமே
இககாகமே இககேகமே
அப்படி இல்லை இப்படி
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே


ஆஆஆ ஆஆஆ
குளிர்ந்தோடும் பூங்காற்று பதம்பாடுதே
இளந்தளிர்யாவும் கிளைமீதில் சதிராடுதே
(குளிர்ந்தோடும்)
வழியெங்கும் கோடிவீடு நிழல்சேர்க்குதே
மலரெல்லாம் விழி போல நமைப்பார்க்குதே
இகலோகமே இனிதாகுமே)

வானவர் காணாத வனராணியே
யவ்வன ராணியே ஏஏ ( வானவர்)
தேவ கானமே பொழிகின்ற கலைவாணியே
வானவர் காணாத வனராணியே

தேனினும் இனிதான மொழி பேசியே
ஆஆஆ
தேனினும் இனிதான மொழி பேசியே
என் மோனத்தின் இருள் நீக்க ஒளி வீசினாய்
மோனத்தின் இருள் நீக்க ஒளி வீசினாய்
இணையாகவே இனி என்றுமே (2)
கனியோடு சுவை போல கலந்தாடுவோம்

படம்: தங்கமலை ரகசியம்
பாடல் கு.மா.பாலசுப்ரமணியம்.
இசை டி.ஜி. லிங்கப்பா.
ஆண்டு 1957.
பாடியவர்கள் : p.லீலா, டி. எம். சௌந்தரராஜன்..

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam