Wednesday, September 7, 2011

மொழியின்றி விரிகின்ற என் கீதம்

மொழியின்றி விரிகின்ற என் கீதம்
வழிகின்ற இளங்காதல் சங்கீதம்
இமையோரம் இதழாலே
இசை சொல்வேன் இளமானே
இனிக்கின்ற துயர் நீக்க வா
எந்தன் ஆசை சொல்லும்
ஓசை காதல் பாஷை
உந்தன் ஆசை சொல்லும் ஓசை
இது என்ன பாஷை

நிலவொன்று பொழிகின்ற நிறம் கண்டு
நிலம் மீது நிஜமாக நீ வந்து
ஏன் தோன்றினாய்
கண் வீணை காதல் இசை மீட்ட
பண் தேனைப் பதமாக்கி நான் ஊற்ற
துளிர் விட்ட ராகங்கள்
சுகம் கொட்டும் நேரங்கள்
சுவை ஊற்றும் வாழ்வுக்கு வரமாகுமோ
கண்ணே கீதா
கீதம் தா தா

வாழ்வென்ற மலர்மீது வழிகின்ற
அழகாகி வலம் வந்து
என் வாழ்வில் கரம்பற்றுவாய்
உயிர் சேரும்
ஒரு இருள்நேரம்
பயிராகி மெய்யொன்று உயிர் பூக்கும்
கவிபேசி நான் ஒட்ட
காதோரம் தேன் சொட்ட
கனவொன்று உன்னாலே நனவாகுமோ
உள்ளம் தந்தேன் உள்ளே வா வா"

இசை:ராஜ் தில்லையம்பலம்
பாடலைப்பாடியவர்: எஸ்.பி.பி
வரிகள் : சுதர்ஷன்
திரைப்படம்: 1999 (கனடிய தமிழ்ப்படம்)

Last 25 songs posted in Thenkinnam