Tuesday, September 13, 2011

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2)
ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2)
காரியம் தவறானால் கண்களில் நீராகி
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
மனசாட்சியே

ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2)
சோதனைக்களம் அல்லவா?
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா?
ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2)

(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2)
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)
(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

பாடியவர் : பாலமுரளி கிருஷ்ணா
படம் : நூல்வேலி

1 Comment:

mskdhev said...

எப்படித்தான் இயற்றியவரை மறக்கின்றீர்களோ புறியவில்லை? கொடுமை!

Last 25 songs posted in Thenkinnam