Wednesday, January 13, 2010

அசல் - தல போல வருமா



காற்றை நிருத்தி கேளு
கடலை அழைத்து கேளு
இவந்தான் அசல் என்று சொல்லும்

கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா
தல போல வருமா

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந்தரையிலும் படுப்பான்
எந்த எதிர்ப்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்

முகத்தை குத்துவான் பகைவன்
முதுகை குத்துவான் நண்பன்
பகையை வென்றுதான் சிரிப்பான்
நண்பரை மன்னித்தெழுவான்

போனான் என்று ஊர் பேசும் போது புயல் என வீசுவான்
பூமி பந்தின் ஒரு பக்கம் மோதி மறுபுறம் தோன்றுவான்
தோட்டங்களில் பூக்களில் தோட்டா தேடுவான்
தோழர்களில் பகைவரையும் சுட்டே வீழ்த்துவான்
மாயமா மந்திரமா

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

நித்தம் நித்தமும் யுத்தம்
இவன் நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுக்கு இல்லை
படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம்
படுக்கை முழுவதும் ரொக்கம்
காட்டு சிங்கம்போல் வாழ்ந்தும்
கண்களில் உறக்கம் இல்லை
ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை
இழிவென்று ஏசுவான்
உன்னை நம்பி நீ வாழும் வாழ்க்கை
உயர்வென்று பேசுவான்
சட்டங்களின் வேலிகளை சட்டென்று தாண்டுவான்
தர்மங்களின் கோடுகளை தாண்டிட கூசுவான்
மாயமா மந்திரமா

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

படம்: அசல்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: சுனிதா மேனன்
வரிகள்: வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam